இந்தியா முழுவதும் விவசாய மற்றும் கிராமப்புற ஊடகங்களை ஊக்குவிக்க, க்ரிஷி ஜாக்ரன் எப்போதும் புதுமையை கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது. இம்முறை, விவசாயிகள் மற்றும் கிராமப்புற சமூகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், Farmer The Journalist மூலம் அவர்களின் பிரச்சினைகள், கவலைகள் மற்றும் சாதனைகளைப் பதிவுசெய்து பரப்புவதற்கான ஒரு மன்றத்தை வழங்குகிறது.
ஃபார்மர் தி ஜர்னலிஸ்ட், விவசாயிகளுக்கு ஒரு வேளாண் பத்திரிகையாளராக இருக்கத் தேவையான திறன்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குகிறது. இம்முயற்சியின் முக்கிய குறிக்கோள், பத்திரிக்கைத் துறையில் பணியாற்ற விரும்பும் கிராமப்புற குடிமக்களுக்கு ஆதரவை வழங்குவதோடு, கிராமப்புற இந்தியாவின் வாழ்க்கையைப் பற்றி தங்கள் சொந்தக் கதைகளைச் சொல்லவும் விவசாயிகளுக்கு அவர்களின் உள் பத்திரிகையாளர்களை மீண்டும் கண்டறிய உதவுவதாகும்.
FTJ மூலம், விவசாயிகள் தங்கள் கருத்துக்கள், பிரச்சனைகள் மற்றும் தங்கள் மாநிலத்தின் கதைகளை நாட்டின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். க்ரிஷி ஜாக்ரன் இந்தக் குரல்களை அதன் மேடையில் கட்டுரைகள், யூடியூப் வீடியோக்கள் போன்ற வடிவங்களில் பகிர்வதன் மூலம் பெருக்குகின்றனர்.
“கிருஷி ஜாக்ரன் விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். விவசாயிகள் சமூகத்துடன் நாங்கள் தொடர்பு கொள்ளத் தொடங்கியபோது, அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் ஊடகத் துறைக்கு பிரதிபலிக்க, விவசாய சமூகத்தில் போதிய பயிற்சி பெற்ற மனங்கள் இல்லை என்பதை உணர்ந்தோம். அந்தச் சிக்கலைத் தீர்க்க, நாங்கள் ஃபார்மர் தி ஜர்னலிஸ்ட் முயற்சியைத் தொடங்கினோம், இங்கு விவசாய சமூகத்தைச் சேர்ந்த சிறந்த திறமையாளர்களை பத்திரிகையாளராகப் பயிற்றுவிக்கிறோம். நாங்கள் குறிப்பாக இளம் தலைமுறையினரை சேர்க்கிறோம், ஏனெனில் இப்போது உங்களிடம் ஸ்மார்ட்போன்கள் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன, அவை விவசாயிகளால் எழுத முடியாவிட்டாலும் அவர்களின் நடைமுறைகள் மற்றும் பிரச்சனைகளை வீடியோவாகப் பிடிக்க உதவுகின்றன. FTJ முன்முயற்சியின் மூலம், விவசாயிகள் பத்திரிக்கையாளர்களாக இருப்பதோடு, உலகின் மூலை முடுக்கெல்லாம் அறிவைப் பரப்ப தங்கள் பயிற்சி பெற்ற திறன்களைப் பயன்படுத்துவார்கள், ”என்று கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியர் எம்.சி. டொமினிக் கூறுகிறார்.
ஃபார்மர் தி ஜர்னலிஸ்ட்டில் பற்றிய பயிற்சி அமர்வுகள்:
FTJ அமர்வுகள் என்பது கிரிஷி ஜாக்ரன் பத்திரிகையாளரால் நடத்தப்படும் அமர்வுகளாகும். இதில்,
வீடியோ உள்ளடக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?
FTJ வீடியோ உள்ளடக்கத்தை படமாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் என்ன?
எந்த வகையான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும்?
ஃபார்மர் தி ஜர்னலிஸ்ட் என்ன தலைப்புகளில் விவாதிக்க வேண்டும்?
விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளை எப்படி நேர்காணல் செய்வது?
FTJ இன் உறுப்பினராக இருப்பதன் சலுகைகள்:
விவசாயிகள் வெற்றிகரமாக ஃபார்மர் தி ஜர்னலிஸ்ட்டில் உறுப்பினரான பிறகு, கிரிஷி ஜாக்ரனிடமிருந்து உண்மையான கடிதத்தைப் பெறுவார்கள். உங்கள் அருகிலுள்ள KVK அல்லது ICAR நிறுவனத்தில் நுழைய கடிதம் உங்களை அனுமதிக்கும்.
க்ரிஷி ஜாக்ரன் தளத்தில் வெளியிடப்படும் வீடியோ ஒன்றுக்கு விவசாயிகள் பண வெகுமதியைப் பெறுவார்கள்.
கிருஷி ஜாக்ரனுடன் தங்கள் பகுதியின் வெற்றிக் கதைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் தங்கள் கதைகளை அரசிற்கு எடுத்துச் செல்ல வாய்ப்பைப் பெறுவார்கள்.
பிறகு நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்... உலகத்துடன் இணைவதற்கு புதிய தொழில் நுட்பங்களுடன் விவசாயிகளின் வெற்றி தொடங்கி, கவலை வரை நீங்கள் வழங்க, பத்திரிகையாளராக உங்களை பதிவு செய்யுங்கள்..
உங்கள் வட்டாரத்தில் உள்ள விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்லது விவசாயத்தில் வெற்றிகாணும் விவசாயிகளை உங்கள் கேமரா போனில் பேட்டி எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.
மேலும் விவரங்களுக்கு: ஆயிஷா ராய்: 76786 53410
Share your comments