அனைத்து தொழிலாளர்களுக்கும் EPFO அமைப்பானது புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டம்
இந்தியாவில் தொழிலாளர் அனைவரும் தங்களின் முதிர்வு காலத்தில் ஓய்வூதிய பலன்களை பெற ஏதுவாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் கீழ் சேமித்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் சிறு சிறு தொகையாக செலுத்தி சேமித்து வருகின்றனர். மேலும் பணிபுரியும் நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை அவரின் PF கணக்கின் கீழ் செலுத்தும்.
வட்டி
அதன் பின்பு ஊழியர் ஓய்வு பெறும் போது இதில் சேமிக்கப்படும் தொகையானது வட்டி விகிதத்துடன் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும். இதில் வட்டி விகிதமானது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனைத்து ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை வழங்க உள்ளது. அதாவது ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் கவரேஜை அதிகரிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.இதன் மூலமாக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவரேஜ் கிடையாது
ஆனால் இப்போது மாதந்தோறும் ரூ.15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு கவரேஜ் என்பதே கிடையாது. அதன்படி இந்த கவரேஜ் அதிகரிக்கப்பட்டால் இத்திட்டத்தில் இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு 60 வயதிற்கு மேல் ரூ.3,000 வரை மாதந்தோறும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சிறப்பு அம்சம்
மேலும் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ஓய்வூதியம், விதவைகளுக்கான ஓய்வூதியம், குழந்தைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களும் பயனாளர்களுக்கு வழங்கப்படும். இதனை தொடர்ந்து இந்த ஓய்வூதிய பலன்கள் பயனாளிகளுக்கு 10 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க...
வேளாண் கருவிகள் வாங்க 50%மானியம்!
மானியத்தில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments