பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி (Indian Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி வட்டி விகிதங்கள் 0.05% முதல் 0.50% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி உயர்வு
சீனியர் சிட்டிசன்களுக்கு 610 நாட்களுக்கு 6.25% வட்டி என்ற ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் இந்தியன் வங்கி வழங்குகிறது. ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ரெப்போ வட்டியை 5.9% ஆக உயர்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியன் வங்கியும் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வட்டி விகிதங்கள் (உயர்த்தப்பட்டவை மட்டும்):
- 121 - 189 நாட்கள் : 3.85%
- 181 நாட்கள் - 9 மாதம் : 4.5%
- 9 மாதம் - 1 ஆண்டு : 4.75%
- 1 ஆண்டு : 5.5%
- 2 ஆண்டு : 5.6%
மாற்றப்படாதவை:
- 7 - 14 நாட்கள் : 2.8%
- 15 - 29 நாட்கள் : 2.8%
- 30 - 45 நாட்கள் : 3%
- 46 - 90 நாட்கள் : 3.25%
- 91 - 120 நாட்கள் : 3.50%
- 1 - 2 ஆண்டு : 5.5%
- 3 - 5 ஆண்டு : 5.75%
- 5 ஆண்டு : 5.65%
610 நாட்கள் சீனியர் சிட்டிசன் திட்டம்:
- பொது வாடிக்கையாளர்களுக்கு : 6.10%
- சீனியர் சிட்டிசன்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) : 6.25%
- சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு (80 வயதுக்கு மேற்பட்டவர்கள்) : 6.50%
மேலும் படிக்க
இரயில் பயணிகளுக்கு இனி பிரச்சினையே இல்லை: புதிய விதிமுறைகள் வந்தாச்சு!
இரயில் பயணிகளுக்கு இனி பிரச்சினையே இல்லை: புதிய விதிமுறைகள் வந்தாச்சு!
Share your comments