படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் படி, தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கூறுகையில், “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு தொழில் வழிகாட்டுதல் மற்றும் தொழில் துவங்க நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்படி, உற்பத்தி சார்ந்த தொழில் துவங்கிட, 15 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. சேவை சார்ந்த தொழில்கள் மற்றும் வியாபாரத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 35 வயது வரையிலும், பெண்கள், பின்தங்கிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் படி, உற்பத்தி சார்ந்த தொழில் துவங்கிட, ரூ.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. சேவை சார்ந்த தொழில்கள் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரை படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினருக்கு நகர்புறத்தில் 15 சதவீதம், கிராமப்புறத்தில் 25 சதவீதம், சிறப்பு பிரிவினருக்கு நகர்புறத்தில் 25 சதவீதம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. உற்பத்தி சார்ந்த தொழில் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்கிட, 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க:
மத்திய அரசு பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், விவரம்!!
Share your comments