கனரா வங்கி (Canara Bank) ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை (FD interest rate) உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வட்டி உயர்வு (Interest hike)
பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. நேற்று (ஏப்ரல் 5) முதல் வட்டி விகிதம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது. இன்று ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள சூழலில் இன்று கனரா வங்கி FD வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டியும் வழங்குகிறது கனரா வங்கி.
கனரா வங்கி FD வட்டி விகிதம்:
- 7 - 45 நாட்கள் : 4%
- 46 - 90 நாட்கள் : 5.25%
- 91 - 179 நாட்கள் : 5.5%
- 180 - 269 நாட்கள் : 6.25%
- 270 நாட்கள் - 1 ஆண்டு : 6.5%
- 1 ஆண்டு : 7%
- 444 நாட்கள் : 7.25%
- 1 ஆண்டு - 2 ஆண்டு : 6.9%
- 2 ஆண்டு - 3 ஆண்டு : 6.85%
- 3 ஆண்டு - 5 ஆண்டு : 6.8%
- 5 ஆண்டு - 10 ஆண்டு : 6.7%
மேலும் படிக்க
வட்டி உயர்வுக்கு இனி வாய்ப்பில்லை: ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவு!
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
Share your comments