பெண்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்துர முன்வந்துள்ளது, அமேசான் நிறுவனம். பெண்களின் தனித்தன்மையை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இந்த நிறுவனம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இலவசப் பயிற்சி
இதன் ஒருபகுதியாக, ஐடி துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் பெண் ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனம் இலவசமாக பயிற்சி வழங்குகிறது. She Dares எனப்படும் இந்த இலவச ஆன்லைன் பயிற்சி பெண் ஊழியர்களின் மேம்பாட்டுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமே பெண்களை தொழிநுட்ப பணிகளுக்கு ஈர்ப்பதுதான்.
பெண்களுக்கு உரிய பயிற்சி வழங்கி, கற்றலில் இருக்கும் இடைவெளியை நீக்கி, வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு SheDares திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப துறையைப் பொறுத்த வரை, அங்குப் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை போதுமான அளவுக்கு இல்லை. எனவே, கூடுதல் பெண்களை ஈர்ப்பதற்காக இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சிக்கான தகுதி
-
வேறுப் பணிகளில் இருந்து IT (தகவல் தொழில்நுட்ப) பணிகளுக்கு மாற விரும்பும் பெண்கள்
-
வேலையில் இருந்து வெளியேறியபின் மீண்டும் ஐடி வேலைவாய்ப்பு பெற விரும்பும் பெண்கள்.
பயிற்சி விபரம்
-
இதுவொரு முழுக்க முழுக்க ஆன்லைனில் வழங்கப்படும் பயிற்சி.
-
இது முற்றிலும் இலவசமானது.
-
இந்தப் பயிற்சியை முடிப்பதற்கு சுமார் 6 மணி நேரம் வரை ஆகும்.
புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் பெண்கள் தவறாமல் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் முயற்சியில் வெற்றி பெறலாம்.
மேலும் படிக்க...
மஹாசிவராத்திரி விழா - ஈஷாவில் கோலாகலக் கொண்டாட்டம்!
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - ஒரு பார்வை!
Share your comments