ஆட்சியின் 100 நாள் நிறைவை முன்னிட்டு அடுத்த 3 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த அறிவிப்பால், அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டில் உள்ள ஏழைமக்களின் வறுமையைப் போக்கவும், நிவாரண உதவி வழங்கவும் ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும் ஏழை எளியவர்களும் இதன் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்களைப் பெற்று பயன்பெறுகின்றனர். ரேஷன் கார்டு இருந்தால்தான் அரசிடம் இந்த உதவிகளைப் பெறமுடியும்.
பரிசு
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது ஆட்சியின் 100 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள சுமார் 15 கோடி மக்களுக்கு மிகப்பெரிய பரிசு வழங்கப்பட்டுள்ளது. இலவச ரேஷன் திட்டத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
35 கிலோ ரேஷன் இலவசம்
பொதுமக்களுக்கு அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வழங்குவதாக யோகி அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டை தாரர்களுக்கு 35 கிலோ ரேஷன் வழங்கப்படுகிறது. கோதுமை, அரிசி, சர்க்கரை, பருப்பு, உப்பு என அனைத்தும் கிடைக்கும். மாநில அரசின் இந்தத் திட்டத்தைத் தவிர, உத்தரப் பிரதேசத்தில் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வழங்கப்படுகிறது.
செப்டம்பர் 30 வரை
இலவச ரேஷன் திட்டத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவச ரேஷன் திட்டத்தை நீண்ட காலத்திற்கு தொடர அரசு ஆலோசித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 15 கோடி மக்கள் பயனடைவார்கள்.
மேலும் படிக்க...
மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!
ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!
Share your comments