மத்திய அரசு ஊழியர்களுக்கு 4%அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இனி அவர்களது அகவிலைப்படி ரூ.27,000 வரை உயர வாய்ப்பு உருவாகியுள்ளது.
பண்டிகைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
50 லட்சம் பேர்
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 38% ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
எவ்வளவு கிடைக்கும்
அடிப்படை ஊதியம்/ஓய்வூதியம் 25000 ரூபாய் என வைத்துக்கொண்டால், 38% விகிதத்தில் 8,500 ரூபாய் அகவிலைப்படி வழங்கப்படும். அதாவது அகவிலைப்படி 1000 ரூபாய் உயருகிறது.
அடிப்படை ஊதியம் 35,000 ரூபாய் 35000 ரூபாய் எனில், 13,300 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 1400 ரூபாய் உயருகிறது. அடிப்படை ஊதியம் 45000 ரூபாய் என்றால் 17100 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 1800 ரூபாய் உயருகிறது.
அடிப்படை ஊதியம் 55,000 ரூபாய் எனில் 20,900 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 2200 ரூபாய் உயருகிறது.அடிப்படை ஊதியம் 65,000 ரூபாய் எனில் 24,700 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 2600 ரூபாய் உயருகிறது.
மேலும் படிக்க...
Share your comments