1. மற்றவை

தங்கப் பத்திரம் விற்பனை- தள்ளுபடி விலையில் தங்கம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Gold Bond Sale - Gold at a discounted price!

தள்ளபடி விலையில் தங்கம் வாங்க ஏதுவாக, தங்கப் பத்திரம் விற்பனைக்காக தேதி உள்ளிட்ட விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பான முதலீடு என்று எண்ணும்போது, தங்கம் மிகச் சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது. அதேநேரத்தில் அதனைப் பாதுகாப்பதுதான் சிரமம். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வந்துவிட்டது தங்கப்பத்திரம். அதாவது பேப்பர் கோல்டு.

தேதி அறிவிப்பு

இதனைக் கருத்தில்கொண்டு,2022-23ஆம் நிதியாண்டுக்கான முதல் தொகுப்பு தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds) விற்பனை ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஜூன் 24ஆம் தேதி தங்கப் பத்திர விற்பனை முடிந்துவிடும். ஜூன் 28ஆம் தேதி தங்கப் பத்திரங்கள் வழங்கப்பட்டுவிடும்.

இதையடுத்து, இரண்டாம் தொகுப்பு தங்கப் பத்திரங்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி முடிவடைகிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி தங்கப் பத்திரங்கள் வழங்கப்பட்டுவிடும்.

எப்படி வாங்குவது?

வங்கிகள், குறிப்பிட்ட தபால் அலுவலகங்கள், SHCIL, CCIL, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். பொதுமக்கள் வங்கிகள் வாயிலாக எளிதாக தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.

நன்மைகள்

  • நேரடியாக தங்கம் வாங்குவதற்கு பதிலாக தங்கப் பத்திரமாக வாங்குவது, அதனைப் பாதுகாப்பதில் உள்ள சுமையைக் குறைக்கும்.

  • தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும்.

  • இதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 2.5% வட்டி தொகையும் கிடைக்கும்.

  • தங்கப் பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.

  • ஆன்லைன் வாயிலாக தங்கப் பத்திரம் வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும்.

மேலும் படிக்க...

Whats-appல் கூட கடன் பெற முடியும்- அதுவும் 30 நொடிகளில்!

வீட்டில் கரப்பான் பூச்சி வளர்க்க 1.5 லட்சம் சம்பளம்!

English Summary: Gold Bond Sale - Gold at a discounted price! Published on: 18 June 2022, 08:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.