1. மற்றவை

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Home loan - Good news

வீட்டுக் கடன் வாங்குவது என்றால் சாதாரண வேலை இல்லை. முதலில் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளை தேட வேண்டும். பின்னர் அந்த வங்கி நமக்கு கடன் தருவதற்கான தகுதி இருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி கடன் கிடைக்கும் என தெரிந்துவிட்டாலும், ஆவணங்கள், செயல்முறை என பேப்பர் வேலைகள் மிக அதிகம். இதையெல்லாம் முடித்து கடனை வாங்குவதற்குள் போதும் போதும் என ஆகிவிடும்.

வீட்டுக் கடன் (Housing Loan)

அனைவருக்கும் வீடுகள் என்ற இலக்கிற்காக வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான பேப்பர் வேலைகளை குறைக்க வேண்டும் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார இணையமைச்சர் கவுஷல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். ஹவுசிங் பைனான்ஸ் தொடர்பாக நடைபெற்ற தேசிய மாநாட்டில் மத்திய வீட்டு வசதி துறை இணையமைச்சர் கவுஷல் கிஷோர் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “வங்கிகளும், பில்டர் நிறுவனங்களும், நிதித் துறை சார்ந்தவர்களும் ஒத்துழைத்து நாட்டில் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் கனவை நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவில் சுமார் 1,36,000 வங்கிக் கிளைகள் இருப்பதாக சில மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்த வங்கிக் கிளைகளில் எளிதாக கடன் பெற முடிந்தால் அனைவருக்கும் வீடு கிடைப்பது எளிதாகி விடும். எனவே கடன் பெறுவதை எளிதாக்க வேண்டியது அவசியமாகிறது” என்று பேசினார்.

மேலும் படிக்க

இலவசங்கள் தொடர்ந்தால் நம் நாடும் இலங்கையாக மாறும்: நல்லசாமி எச்சரிக்கை!

சாலை விபத்துகளை தடுக்க புதிய டெக்னாலஜி அறிமுகம்!

English Summary: Good News for Home Loan Borrowers: Union Minister Announcement! Published on: 14 July 2022, 07:08 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.