இந்தியன் வங்கி தற்போது நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதனை இப்பதிவில் காண்போம்.
வட்டி விகிதம் (Interest Rate)
இந்தியாவில் தற்போது நிலவும் அசாதாரண பொருளாதார சூழ்நிலையில் மக்கள் பாதுகாப்பான முதலீடு திட்டத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்துடன் அண்மையில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இது முதலீட்டுத்தாரர்களுக்கு லாபத்தை அளிக்கிறது.
தற்போது நிலையான வைப்பு நிதி திட்டம் சேமிப்பதற்கான சிறந்த வழியாக உள்ளது. தற்போது இந்தியன் வங்கி இத்திட்டத்தின் வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. அதாவது 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டு இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பான வட்டி விகித சலுகை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியன் வங்கி “IND சக்தி 555 நாட்கள்” என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் பொதுமக்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டி வழங்கப்படுகிறது.
வட்டி உயர்வு (Interest Hike)
- 7 – 29 நாட்களுக்கான வட்டி விகிதம் – 2.80%
- 30 முதல் 45 நாட்களுக்கான வட்டி விகிதம் – 3%
- 46 – 90 நாட்களுக்கான வட்டி – 3.25%
- 91 – 120 நாட்களுக்கான வட்டி – 3.50%
- 9 – 1 வருடத்திற்கு – 4.75% வட்டி
- 3 ஆண்டுகள் – 6.50%
- 5 மற்றும் அதற்கு மேலான வருடங்களுக்கு – 6.10%
மேலும் படிக்க
EPFO: குறைந்தபட்ச பென்சன் உயர்வு எப்போது? மத்திய அரசின் பதில் என்ன?
Share your comments