குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வேண்டாம் ஒதுக்கப்பட்டப் பாடங்களில் இருந்து அந்தக் கஷ்டமானக் கேள்விகள் கேட்கப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, பொதுத் தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
அதன்படி 12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.இதேபோல்,10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே, மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022- க்கான வினாத்தாள் வழங்கப்படும்.
எனவே, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கி, பாடங்களை விரைந்து முடிக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!
Share your comments