1. மற்றவை

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: இனி இது எல்லாமே இலவசம் தான்!

R. Balakrishnan
R. Balakrishnan
SBI Mobile Banking

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு (State Bank of India) நாடு முழுவதும் 45 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், மொபைல் பேங்கிங் வாயிலான பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக, மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கான SMS கட்டணங்களை எஸ்பிஐ வங்கி ரத்து செய்துள்ளது.

மொபைல் பேங்கிங் (Mobile Banking)

மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகளுக்கான செலவுகள் குறைவதோடு, எளிய வாடிக்கையாளர்களால் செலவில்லாமல் பணப் பரிவர்த்தனைகளை மொபைலிலேயே செய்ய முடியும். இது மட்டுமல்லாமல், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் USSD சேவைகளை பயன்படுத்தி வங்கி சேவைகளை இலவசமாக பயன்படுத்தலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் இருந்து *99# என டயல் செய்தால் இலவச வங்கி சேவைகளை பயன்படுத்தலாம். மேலும், எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில், மொபைல் பணப் பரிவர்த்தனைகளுக்கான SMS கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: SBI ஆஷா உதவித்தொகை ரூ.15,000; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

*99# டயல் செய்து என்னென்ன சேவைகளை இலவசமாக பயன்படுத்தலாம்?

  • பணம் அனுப்பலாம்
  • பணம் பெற கோரிக்கை விடுக்கலாம்
  • வங்கிக் கணக்கு பேலன்ஸ் தொகை பார்க்கலாம்
  • மினி ஸ்டேட்மெண்ட்
    யூபிஐ பின் நம்பர் மாற்றலாம்.

மேலும் படிக்க

ஜான்சன் பேபி பவுடருக்கு தடை: அரசின் அதிரடி நடவடிக்கை!

ரிசர்வ் வங்கிக்கு எச்சரிக்கை விடுத்த உலக வங்கி: காரணம் இது தான்!

English Summary: Good news for SBI customers: Now it's all free! Published on: 19 September 2022, 05:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.