ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி கொடுத்த தகவல்களின்படி, கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 9,00,000-க்கும் அதிகமான செயலிகளை நீக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அளவு செயலிகளை நீக்குவதன் மூலம் மொத்த செயலிகள் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்காக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக எந்த விதமான புதுப்பிப்புகளையும் கொடுக்காத செயலிகளை நீக்கப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்கு தளங்கள் தேவையில்லாத செயலிகளை நீக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
செயலிகள் நீக்கம் (Apps Removed)
இதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இதுவரை அண்ட்ராய்டில் 8,69,000 செயலிகளும், ஆப்பிளில் 6,50,000 செயலிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வித புதுப்பிப்புகளும் இல்லாமல் இருந்துள்ளன. பயனர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ள நிறுவனங்கள், புதுப்பிக்காத செயலிகள், தற்போதைய ஆண்ட்ராய்டு/ஆப்பிள் இயங்குதளத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்த முடியாது எனவும், தினம் தினம் புதுப்புது பாதுகாப்பு வசதிகளைக் கொண்டு வரும் இயங்குதளங்களில் இந்த செயலிகளால் பாதுகாப்பு பிரச்சனை வரலாம் எனவும் கூறியுள்ளது.
இதற்கு முன்னரே இது போன்ற செயலிகள் நீக்கப்பட்டிருந்தாலும் இந்த அளவு செயலிகள் நீக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தோன்றுகிறது. சமீப காலமாக ஆண்ட்ராய்டு இயங்குதளமானது தனது பாதுகாப்பு வசதியினை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு மொபைல் நிறுவனங்களும் தங்களுக்குப் பிரத்யோகமான பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி வருகின்றன. மோட்டோரோலாவின் திங்க் ஷீல்டு மற்றும் சாம்சங் நிறுவனத்தின் நாக்ஸ் போன்றவை தற்பொழுது சந்தைகளில் பிரபலமானவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதுகாப்பு அம்சங்கள் பயனாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பதுடன், தடைகளில்லா உபயோகத்தினை மேம்படுத்துவதை உறுதி செய்கின்றன.
மேலும் படிக்க
குறுஞ்செய்தி மூலம் பண மோசடி: விழிப்புணர்வு அவசியம்!
ஆதார் உடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: வெளியாகவிருக்கும் புதிய அறிவிப்பு!
Share your comments