கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும்வகையில் அரசு ஊக்கத்தொகை அளித்து வருகிறது. கிராமப்புறப் பெண்கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை 10-ம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு மறுஆய்வு செய்து மாணவியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 500 ரூ, 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு, ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறது. எனவே 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவியர்களின் விவரங்கள், பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கிலே இந்த ஊக்கத் தொகையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
மேலும் படிக்க:
PM-SYM-முதியோர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்!
Share your comments