அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நன்று. இந்த வாசகம் மதுவிற்கும் பொருந்தும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் 10 ரூபாய்க்கு மளிகைக்கடைகளில் ஒயினை விற்பனை செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
அரசுக்கு வருமானம் (Revenue to the State)
மது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மது விளம்பரத்தில் வாசகங்களைப் போட்டுவிட்டு மதுபானத்தை விற்பனை செய்யும் அளவுக்கு ஆட்சியாளர்கள் மதுக்கடை மூலம் வரும் வருமானத்தை ஈட்டவே விரும்புகிறார்கள்.
பூரண மதுவிலக்கு
தமிழகத்தில் அரசு சார்பில் மதுப்பானக்கடைகள் (டாஸ்மாக்) நடத்தப்படுகிறன்றன. இதனால் பாதிக்கப்படும் குடும்பத்தினர், மது விற்பனையை அரசு செய்வதை விட்டுவிட்டு, பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
ரூ.10க்கு ஒயின் (Wine for Rs.10)
ஆனால், மகாராஷ்டிரா மாநில அரசு, ஒயின் விற்பனையை மளிகைக் கடை முதல் சூப்பர் மார்க்கெட், பேக்கரி வரை என அனைத்து இடங்களிலும் கிடைக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த அதிரடித் திட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது, மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கடைகளிலும் ஒரு லிட்டர் ஒயின் 10 ரூபாய்க்கு கிடைக்கும்.
குறைவான போதை (Less addictive)
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காரணம், மற்ற மதுவகைகளைக் காட்டிலும் மிக மிக குறைவான போதைவஸ்துவை ஒயின் கொண்டிருப்பதால், அதனை அனைத்து இடங்களிலும் விற்பனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என மாநில அரசு கருதுகிறது.
மிக அதிகமான போதை மது வகைகளே தாராளமாக கிடைக்கும்போது, மிக மிக குறைவான போதை தன்மை கொண்டதை நடைமுறைப்படுத்தினால், பொருளாதார ரீதியாகவும் மாநிலத்துக்கு உதவும் என்ற வகையில் அம்மாநில அரசு இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
உற்பத்தியில் முதலிடம் (Top in production)
ஒயின் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டும் 40 முதல் 45 ஒயின் உற்பத்தி கூடங்கள் உள்ளன. அவை இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 80 விழுக்காடு ஒயினை உற்பத்தி செய்கின்றன.
மேலும், இந்தியாவில் ஒயினின் சந்தை மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய். அதில், 65 விழுக்காடு மகாராஷ்டிராவுக்கு கிடைக்கிறது என்பதால், இந்த சந்தையை மேலும் விரிவுபடுத்த அம்மாநில அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வராமலே இருக்கட்டும் என்பதே பல குடும்பத்தலைவிகளின் எண்ணமாக உள்ளது.
மேலும் படிக்க...
பசுமை தமிழ்நாடு’ திட்டத்திற்காக தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு
கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!
Share your comments