தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு-
இன்று (21.08.2023) : தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதனைத்தொடர்ந்து வருகிற 22 ஆம் தேதி (நாளை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.08.2023 முதல் 26.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை எட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): நம்பியார் (ஈரோடு)- 3 செ.மீ, கூடலூர் பஜார் பகுதியில் 2 செ.மீ மழை, தலைவாசல், மேல் கூடலூர், கொத்தாவச்சேரி, பார்வுட், நடுவட்டம், சேருமுள்ளி, பந்தலூர் தாலுகா அலுவலப்பகுதியில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அதேப்போல் அதிகப்பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பாளையங்கோட்டை பகுதியில் 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு வானிலை நிலவரம் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காணவும் என தென் மண்டல வானிலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம்- மத்திய அரசு அறிவிப்பு
Share your comments