1. மற்றவை

ரகசிய கேமராவை கண்டறியும் சாதனம்: குறைந்த விலையில் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது!

R. Balakrishnan
R. Balakrishnan
Hidden camera Detector

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒருவரின் வீட்டிற்குச் சென்றாலோ அல்லது ஹோட்டலில் தங்கியிருந்தாலோ, நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் தங்கியிருக்கும் அறையில் ரகசிய கேமரா இருக்கிறதா என்று பல நேரங்களில் நீங்கள் பயப்படுவீர்கள். இப்படியும் சிந்திக்க வேண்டியது அவசியமானது ஏனெனில் பல சமயங்களில் யாரோ ஒருவர் தங்கள் அறைகளில் உள்ள கேமராக்களை வைத்து வீடியோ எடுக்கும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ரகசிய கேமரா (Hidden Camera)

சில நேரங்களில் ஹோட்டல் குளியலறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதுபோன்ற சம்பவங்கள் உங்களுக்கும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதனால், மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களை விரைவாகக் கண்டுபிடிக்கும் சாதனத்தைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

பிளிப்கார்ட்டில் இருக்கும் சாதனம் (Equipment in Flipkart)

Flipkart-ல் வாடிக்கையாளர்களுக்காக GIZWORLDS ELECTRONICS Detector & Camera Finder என்ற சாதனம் உள்ளது. இது மறைக்கப்பட்ட கேமராக்களை கண்டுபிடித்து விடும். இதன் மூலம் மறைக்கப்பட்ட கேமராக்களைக் கண்டறியும் செயல்முறை மிகவும் எளிதாகிறது.

இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது மற்றும் வாடிக்கையாளர்கள் அதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஹோட்டலில் தங்க வேண்டியிருந்தால், இந்த சாதனம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிறப்புகள் (Special Features) 

வாடிக்கையாளர்கள் Flipkart-லிருந்து வெறும் 1,199 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த சாதனம் அளவில் சிறியது மற்றும் அதன் எடையும் குறைவாக உள்ளது. உலோகம் மற்றும் கேமராவைக் கண்டறிவதற்கான சிறப்பு சென்சார்கள் மற்றும் குறிகாட்டிகள் உள்ளன. அவை மறைந்திருக்கும் சாதனம் எங்கு மறைக்கப்பட்டுள்ளது என்பதை கண் இமைக்கும் நேரத்தில் உங்களுக்குத் தெரிவிக்கும்.

மேலும் படிக்க

அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!

உஷார்: இரண்டே நிமிடம் போதும் ரகசிய கேமராவை கண்டுபிடிக்க!

English Summary: Hidden Camera Detector: Available on Flipkart at Low Prices! Published on: 15 August 2022, 08:56 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.