ஹோண்டா டூவீலர்ஸ் நிறுவனம் 'சிபி350 பிரிகேட்' என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. 'சிபி350 பிரிகேட்' என்கிற பெயருக்கான காப்புரிமையையும் தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. அதோடு ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு போட்டியளிக்கும் விதமாக ஹோண்டா, ஜாவா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே ராயல் என்பீல்டு அறிமுகம் செய்த மீட்டியோர் 350-பைக்கிற்கு போட்டியாக ஹைனெஸ் சிபி350-ஐ களமிறக்கியது ஹோண்டா நிறுவனம். அதோடுவிடாமல், மேலும் ராயல் என்ஃபீல்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்க்கும் விதமாக இந்த 'சிபி350 பிரிகேட்' என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டர் ரக பைக்காக சிபி350 விளங்குகிறது.
ஹோண்டா சிபி350 பிரிகேட் (Honda CB350 Brigade)
விற்பனையில், ராயல் என்ஃபீல்டு, மீட்டியோர் 350 பைக்கை முந்தமுடிவில்லையென்றாலும், தனது முயற்சியை கைவிடாமல் அடுத்த வேரியண்டை களமிறக்கியுள்ளது ஹோண்டா நிறுவனம். புதிய சிபி350 பிரிகேட் தோற்றத்தில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுக்கிறது. ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து சற்று வேறுப்படும்.
இருந்தாலும், இதிலும் 348சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை தான் ஹோண்டா நிறுவனம் பொருத்துவதற்கு வாய்ப்புள்ளது. இதில், அதிகப்பட்சமாக 20.8 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. அதோடு, 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் க்ளட்ச்சின் உதவியுடன் வழங்கப்படுகின்றன.
சிறப்பம்சங்கள் (Special Features)
இவ்வாறான புதிய 350சிசி பைக்குகள் வரவுகளுக்கு மத்தியில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் சிஆர்எஃப் 300எல் மற்றொரு பைக்கையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண சாலை மற்றும் ஆஃப்-ரோடு சாலை என இரு விதமான சாலைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக விளங்கும் ஹோண்டா சிஆர்எஃப்300எல் 286சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 26.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் ஸ்லிப் & உதவி க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
இதன் விலை நிலவரம் குறித்த முழுமையான தகவல்கள், இன்னும் நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை, தோராயமாக 2.1 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
பஜ்ஜி சுட்ட எண்ணெயில் கார் ஓடுது!
பைக் பிரியர்களுக்கு குட் நியூஸ்: மீண்டும் வருகிறது யமஹா RX 100!
Share your comments