பொதுவாக மத்திய அரசுக்கு வருவாய் தரும் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
தவணை
இதே நடைமுறையை மாநில அரசுகள் கடைப்பிடித்தாலும், மற்ற துறை ஊழியர்கள், தீபாவளியின்போது, வட்டியில்லாக் கடனாக ஒரு குறிப்பிட்டத் தொகை வழங்கப்பட்டு, அந்தத் தொகை பின்னர் மாதந்தோறும் தவணைகளாக வசூலிக்கப்படும்.
தீபாவளி பண்டிகை
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் ஆகியவை உடனடி நினைவுக்கு வந்தாலும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி என்றால் சட்டென நினைவுக்கு வருவது தீபாவளி போனஸ் தான். இந்நிலையில் ஒன்றிய அரசு ஊழியர்கள் போனஸ் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, இந்த ஆண்டு எவ்வளவு சதவீதம் தீபாவளி போனஸ் வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அமைச்சரவையில் முடிவு
பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில நாள்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?
ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
Share your comments