ஒருவரிடம் இருந்து நிலம் வாங்கும் முன்பு பட்டா சிட்டா நில வரைபடம் (FMB)வில்லங்கம் அதாவது EC இவற்றை சரிபார்த்து பின்பு ஒருவரிடம் இருந்து நிலம் வாங்க வரைபடம் முக்கிய ஆகும். எனவே இதனை எப்படி பெறுவது என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபருக்கு சொந்தமனா அல்லது சேர வேண்டிய இடம் எவ்வளவு உள்ளது என்பதை அளவுகள் மூலம் சுட்டி காட்டும் வரைபடம் ஆகும்.
அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் சர்வே எண் உட்பிரிவு எண் வரைபடத்தில் குறிப்பிட பட்டியிருக்கும். மேலும் எல்லைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நீள அகலங்கள் இவற்றுள் இடம்பெற்றிருக்கும். நிலத்திற்கான வரைபடம் வைத்து நிலத்தின் வடிவம் நீள அகலங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் தாசில்தார் அலுவலகத்தில் நிலத்திற்கான வரைபடம் பராமரிக்கப்பட்டு இருக்கும், மேலும் இந்த வரைபடம் இணையதள மூலமாகவோ அல்லது VAO அல்லது தாசில்தார் அலுவலகத்தில் வரைபடம் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.
நில வரைபடம் FMB Sketch வரைபடத்தை ஆன்லைனில் பெறுவது எப்படி?
தமிழ்நாட்டின் குடிமக்கள் FMB வரைபடத்தை ஆன்லைனில் பார்க்க எங்கும் எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் பெறும் வசதி உள்ளது.
1: முதலில் https://eservices.tn.gov.in/ தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
2: இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் கிடைக்கிறது, இதில் ஒன்றை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வுசெய்யவும்.
3: புலப்பட விவரங்களை பார்வையிட என்பதை (கிளிக் செய்யவும்) அதாவது தேர்ந்தெடுக்கவும்.
4: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து மாவட்டம் , வட்டம், கிராமம் தேர்ந்தெடுக்கவும். பின்பு, புலன் என்னை உள்ளீடு செய்து உங்களோட உட்பிரிவு என்னை தேர்வு செய்ய வேண்டும்.
5: அங்கீகார மதிப்பை அதாவது (CAPTCHA) உள்ளீடு செய்து சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
7: புலப்பட பார்வையிட என்பதை (கிளிக் செய்யவும்).
8: உங்கள் வரைபடம் விவரங்கள் உங்கள் பக்கத்தில் தோன்றும், வரைபடம் சரிபார்த்து கொள்ளவும்.
மேலுகாணும் வழிமுறையின்படி, நீங்கள் சுலபமாக ஆன்லைனில் நில வரைப்படத்தை பெற முடியும்.
மேலும் படிக்க:
EPFO வேலை வாய்ப்பு 2023 – 2859 SSA காலிப்பணியிடம் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
Share your comments