வருமான வரியை சட்ட ரீதியாக சேமிக்க முடியுமா என்ற சிலரின் கேள்விகளுக்கு, முடியும் என்பது தான் நிச்சயமான பதில். வருமான வரியை சேமிக்கும் சில வழிமுறைகளையும், அது தொடர்பான சில சந்தேகங்களையும் இங்கு காண்போம்.
வருமான வரியை எப்படி கணக்கிடுவது?
சம்பளம், வங்கி டெபாசிட் மூலமான வட்டி, வீட்டு வாடகை போல நீங்கள் வருமானம் ஈட்டும் வழிகளை பட்டியலிட வேண்டும். இதில் சம்பள வருமானம் என்பது அடிப்படை சம்பளம், அகவிலை படி, கமிஷன் போனஸ், வீட்டு வாடகை படி ஆகியவை அடங்கும். இதில் தீபாவளி போனஸ், ஆண்டு போனஸ் உள்ளிட்டவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தனிநபர்களுக்கான வருமான வரி வரம்பு என்ன?
ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு (Income) வரி கிடையாது. 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 5% வரி. 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 20% வரி. 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்துக்கு 30% வரி.
Form 26AS படிவத்தை எப்படி பார்ப்பது?
வருமான வரித் துறையின் eFiling இணையதளத்தில் My Account ஆப்ஷனுக்கு கீழ் View Form 26AS ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது 26AS படிவத்தை பார்க்கலாம்.
வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?
வருமான வரித் துறையின் eFiling இணையதளத்தில் View Returns/Forms ஆப்ஷனை கிளிக் செய்து ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை பார்க்கலாம். தேவைப்பட்டால் அதை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
வருமான வரியை சேமிப்பது எப்படி?
PPF, தேசிய சேமிப்பு சான்றிதழ், தேசிய பென்சன் திட்டம், ELLS திட்டங்கள், வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்து சட்ட ரீதியாகவே வருமான வரியை சேமிக்கலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வீட்டுக் கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ் சொன்ன SBI
சிறுசேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவத்தை அறியச் வேண்டி தருணம் இது!
Share your comments