1. மற்றவை

அமேசான், பிளிப்கார்ட்டில் பொருட்களை எப்படி விற்பது?

T. Vigneshwaran
T. Vigneshwaran
E-Commerce

ஆன்லைனில் பொருட்களை வாங்குவது தற்காலத்தில் சாதாரணமான செயலாகி வருகிறது. கடைவீதிக்குச் சென்று ஆராய்ந்து துணி, பொருட்களை வாங்குவதற்குப் பதில் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைனில் வாங்குவது எளிமையாகிவிட்டது. உள்ளங்கைக்குள் அடங்கும் ஒரு ஸ்மார்ட் போனில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற செயலிகள் மூலம் பொருட்களை இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் பெற முடிகிறது.

ஆன்லைனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களை வைத்துள்ளனர். ஆமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்குவது போலவே, உங்கள் பொருட்களை எளிமையான முறையில் விற்பனையும் செய்யலாம்.

ஆன்லைனில் தளத்தில் பொருட்களை விற்பனை செய்ய என்ன தேவை?

ஆன்லைனில் தளங்களில் விற்பனையாளராகப் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்வது எளிமையான காரியமே. உங்களிடம் GST எண், PAN கார்ட் எண், வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண் மட்டும் தேவை.

அமேசான் என்றால் https://sell.amazon.in/மற்றும் பிளிப்கார்ட் என்றால் https://seller.flipkart.com/என்ற இணையத்தளத்தில் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஆர்டர்கள் பெறுவது எப்படி?

நீங்கள் விற்க விரும்பும் பொருட்களை ஆன்லைனில் வகையைக் குறிப்பிட்டு விற்பனைக்குப் பட்டியலிட வேண்டும். அதனைத்தொடர்ந்து, உங்கள் பொருட்கள் மக்களுக்குக் காட்சியாகும். ஆர்டர் செய்தால் அதற்கான தகவல் உங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

பணம் எப்படி வரும்?

அமேசானில் 15 நாட்களுக்கு ஒரு முறை உங்களுக்கு வங்கிக் கணக்கில் விற்பனையான பொருட்களுக்கான பணம் செலுத்தப்படும். பிளிப்கார்டில் 7 முதல் 15 நாட்களில் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

கமிஷன் உண்டா?

ஆம், நீங்கள் விற்பனை செய்த பொருட்களில் விலையில் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக நிறுவனங்கள் பெறுகின்றனர். கமிஷன் பணம் பிடித்த போக மீதம் பணம் உங்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மேலும் படிக்க:

விவசாயிகளை அழைக்காமல் என்எல்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை

தமிழகம்: பள்ளி மதிய உணவில் இனி சிக்கன் வழங்கப்படும்

English Summary: How to sell products on Amazon, Flipkart? Published on: 07 January 2023, 07:26 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.