கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களின் வீட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்கும் கருவிக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் மற்றொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று 2-வது அலை
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும் இந்த தீவிரம் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா அறிகுறி உள்ளவர்களை விரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்தினால் வைரஸ் சங்கிலி உடைபடும், எனவே தான் கொரோனா தொற்று பரிசோதனைகளுக்கு மத்திய-மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்தியாவில் நாள்தோறும் சுமார் 20 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோவிசெல்ப் கருவிக்கு அனுமதி
இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் கொரோனா தொற்றை வீட்டிலேயே கண்டறிவதற்கான கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனை பூனேவை மையமாக கொண்டு செயல்படும் மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் லிட். நிறுவனம் தயாரித்து உள்ளது.
கோவிசெல்ப் கிட் CoviSelf kit எனப்படும் இந்த ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்ட் (ஆர்.ஏ.டி.)கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் வீலை ரூ.450 எனவும், இதனை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி,
வழிக்காட்டு நெறிமுறைகள்
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தவர்கள் மட்டுமே இந்த கருவியை பயன்படுத்த வேண்டும்.
குறைவான பாதிப்பு சில நேரங்களில் ஆர்.ஏ.டி. கருவிகளில் விடுபட நேரிடலாம் எனவே பரிசோதனையில் (நெகட்டிவ்)என்று முடிவு வந்தாலும், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனே ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனை செய்யவேண்டும், மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்பத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோவிசெல்ப் செயலி
செல்போன் செயலியில் விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு ஏற்ப இந்த கருவிகளை பயன்படுத்தி வீட்டு பரிசோதனை நடத்தப்பட வேண்டும். Mylab CoviSelf App என்ற செயலியை கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.
பதிவிறக்கம் செய்த பிறகு பரிசோதனை கருவியை பயன்படுத்தும் முறையை தெளிவாக படித்துவிட்டு சோதனை செய்ய வேண்டும். பிறகு பரிசோதனை அட்டையை கோவிசெல்ப் செயலி மூலம் படமாக எடுத்து அனுப்ப (அப்லோட் செய்ய) வேண்டும். இவ்விதம் அனுப்பப்படும் தகவல்கள் ஐசிஎம்ஆர் கோவிட்-19 சோதனை தளத்துக்கு சென்று அங்கு பதிவாகும்.
மேலும் பிடிக்க..
கொரோனா பாதிப்பு: வருமானவரி தாக்கல் செய்ய அவகாசம் செப்.30 வரை நீட்டிப்பு!!
காற்றோட்டமான இடங்களில் கொரோனா தொற்று பரவல் குறைவு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!
Share your comments