உலகில் அழியும் நிலையில் உள்ள பழங்குடி இனங்களில் ஒன்று ஜாரவா. வெளி உலகத் தொடர்பு இல்லாமல் இன்னும் எஞ்சியிருக்கும் கடைசி இந்திய ஆதிவாசி இனங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் வசித்து வருபவர்கள் தான் இந்த ஜாரவா பழங்குடியினர். இவர்கள் தெற்கு மற்றும் மத்திய அந்தமானின் வாழ்ந்து வருகிறார்கள். ‘மண்னின் மைந்தர்கள்’ என்பதே ஜாரவா என்கிற சொல்லுக்கு அர்த்தம். இவர்கள் அந்தமானில் வாழ்ந்தாலும், இந்தியர்களின் மரபணு இவர்களது உடலில் இல்லை என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு தீவுகளில் இன்னமும் பழங்குடியினர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிறந்தால், குலப் பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுப்பார்களாம். இது அவர்களின் ஒற்றுமையின் அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
வெண்மை நிற குழந்தை (White colour baby)
அவர்கள் காலப்போக்கில் நாகரீகத்தை ஏற்றுகொண்டு வாழ பழகிவிட்டனர். இவர்களை பாதுகாக்க, இவர்கள் வசிக்கும் காட்டுப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னமும் சிலர் கற்கால வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர். அவர்களில் முதல்நிலையில் இருப்பவர்கள் 55 அயிரம் ஆண்டுகளாக அந்தமான் தீவில் வாழும் ஜாரவா பழங்குடியினர்.
உலகத்துடன் எந்தவொரு வகையிலும் சிறு தொடர்பு கூட இல்லாமல் வாழ்ந்து வரும் இவர்கள் பல்வேறு வினோத பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். ஜாரவாக்களைப் படம் பிடிப்பது, விடியோ எடுப்பது அவர்களுக்கு உணவு அளிப்பது போன்ற நேரடியாகத் தொடர்புகளை மேற்கொள்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இங்கு வாழும் பெண்ணிற்கு வெள்ளை நிற குழந்தை பிறந்தால், மரண தண்டனை விதித்து அந்த குழந்தையை அவர்கள் கொன்று விடுவார்கள் என்பது தான் அந்த விநோதத்தின் உச்சம். இவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதால் கருமை நிறத்தில் தான் இருப்பார்கள்.
ஒற்றுமை (Unity)
அவர்களை பொறுத்தவரை, வெள்ளை நிறத்தில் இருக்கும் குழந்தையை வேற்றுமையாக கருதுகிறார்கள். இதனால் தான் கருப்பு நிறத்தை தாண்டி வெண்மை நிறத்திலான குழந்தையை கொன்று விடுகிறார்கள். அதுவும் தந்தையே அந்தக் குழந்தையை கொன்று விடுகிறார் என்பது தான் மூட நம்பிக்கையின் உச்சம். இது தவிர, இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தை பிறந்தால், குலப் பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுப்பார்களாம். இது அவர்களின் ஒற்றுமையின் அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
கருப்பு என்பது இவர்களுக்கு முக்கியம் என்பதால், இங்கு கர்பிணிகளுக்கு விலங்குகளின் ரத்தம் கொடுக்கப்படுமாம். அந்த ரத்தத்தை குடித்தால், பிறக்கும் குழந்தையின் நிறம் கருப்பாக இருக்கும் என்கிறார்கள். இப்போது ஜாரவா பழங்குடி இனம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.. மொத்தமாகவே வெறும் 380 பேர் மட்டுமே இந்த இனத்தில் எஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் சுமார் 28,077 பழங்குடியினர் உள்ளனர். இதில் ஐந்து பழங்குடியினத்தவர்கள் 500-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளனர்.
மேலும் படிக்க
Share your comments