1. மற்றவை

இந்தக் கிரெடிட் கார்டு வாங்கினால், ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு இலவசம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
If you buy this credit card, accident insurance of Rs 10 lakh is free!

பல நாட்கள் பணத்தைச் சேர்த்து, நாம் ஆசைப்படும் பொருளை வாங்கி, நண்பர்களிடம் காட்டிப் பெருமைப்பட்டதெல்லாம் ஒருகாலம்.ஆனால் இப்போது எந்தப் பொருளை வாங்க நினைத்தாலும், உடனடியாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குவது, இளைஞர்களின் வாடிக்கையாகவே மாறி வருகிறது.

எனவே இளையத் தலைமுறையினரின் கவுரமாகவே கிரெடிட் கார்டு பார்க்கப்படுகிறது. இத்தகையோரைக் கவரும் வகையில், யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் புதிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.இந்நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக புதிய புதிய துறைகளில் காலடி வைத்து வருகிறது.


இந்நிலையில் வங்கித் துறையில் கால்பதித்துள்ள பதஞ்சலி நிறுவனம் புதிய கிரெடிட் கார்டு சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த கிரெடிட் கார்டில் வாடிக்கையாளர்கள் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து காப்பீடாக ரூ.10 லட்சம் வரையில் கிடைக்கும்.

இந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்தால் நிறைய சலுகைகளைப் பெறலாம் என பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதஞ்சலி பொருட்களை இந்த கார்டு மூலமாக வாங்கினால் 5 சதவீத தள்ளுபடி பெறலாம். இதேபோல், மற்ற பிராண்டு பொருட்களை ஷாப்பிங் செய்வதற்கு ரிவார்டு பாயிண்டுகள் (Reward Points)வழங்கப்படுகின்றன.

இந்த கிரெடிட் கார்டு சேவைக்காக பதஞ்சலி நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாபா ராம்தேவும் பதஞ்சலி நிறுவனத் தலைவருமான ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

புதியக் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- சென்னைக்கு ஆபத்து!

விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்!

English Summary: If you buy this credit card, accident insurance of Rs 10 lakh is free!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.