1. மற்றவை

இந்த வசதி இருந்தால், இலவச LPG சிலிண்டர் கிடைக்கும் - விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
If you have this feature, Free LPG Cylinder - Details Inside!

அனைவருக்கும் சுகாதாரமான சமையல் எரிவாயு இணைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் மானிய விலையில் சிலிண்டர் என்னும் திட்டம்.

ஆனால் இதன் பயனாக 400 ரூபாய்க்கு விற்பனையான சிலிண்டர் விலை இன்று 950 ரூபாயாக அதிகரித்துள்ளது. அரசு மானியம் நம் வங்கிக் கணக்கிற்கு வருகிறதா? என்றால், அதைத் தெரிந்துகொள்வதற்குள் அடுத்த சிலிண்டரை புக் செய்யும் நேரம் வந்துவிடுகிறது. இப்படிப் புலம்பும் வாடிக்கையாளர்களுக்கு அடித்துள்ளது ஜாக்பாட்.

அந்தவகையில், Paytm தனது இயங்குதளத்தின் மூலம் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் புதிய பயனர்களுக்கு அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கானப் பயனாளிகள் ஏற்கனவே தங்கள் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்ய Paytm ஐப் பயன்படுத்துகின்றனர். தற்போது, பாரத் கேஸிற்கான முன்பதிவு Paytm செயலி மூலமும் செய்யப்படுகிறது. சமீபத்திய சலுகையின் மூலம், புதிய பயனாளிகள் தங்கள் முதல் முன்பதிவில் 30 ரூபாயை கேஷ்பேக்காகப் பெறலாம். Paytm ஆப்ஸில் பணம் செலுத்தும் போது, FIRSTCYLINDER என்ற ப்ரோமோகோடைப் பயன்படுத்தினால் போதும்.

இந்த கேஷ்பேக் (Paytm) சலுகை மூன்று பெரிய LPG நிறுவனங்களின் சிலிண்டர் (LPG Cylinder) புக்கிங்கிற்கும் பொருந்தும். அவை Indane, HP Gas, மற்றும் BharatGas. Paytm Postpaid எனப்படும் Paytm Now Pay Later திட்டத்தில் பதிவுசெய்து சிலிண்டர் புக்கிங்கிற்கு அடுத்த மாதம் பணம் செலுத்தும் விருப்பம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

கூடுதலாக, ஏற்கனவே உள்ள Paytm பயனாளிகள் தங்கள் சிலிண்டரை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. Paytm பயன்பாட்டில் பணம் செலுத்தும் செயல்முறையை நிறைவு செய்யும் முன் அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், கூப்பன் குறியீட்டை FREEGAS பயன்படுத்த வேண்டும்.

முன்பதிவு எப்படி?

  • Book Gas Cylinder' க்குச் செல்லவும்.

  • எரிவாயு வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.

  • உங்கள் மொபைல் எண்/எல்பிஜி ஐடி/நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்

    உங்களுக்கு விருப்பமான முறையில் கட்டணத்தை முடிக்கவும்

  • அருகிலுள்ள gas ஏஜென்சி சிலிண்டரை பதிவு செய்த முகவரிக்கு வழங்கும்.

  • Indane, HP Gas மற்றும் Bharat Gas ஆகிய 3 பெரிய எல்பிஜி நிறுவனங்களின் சிலிண்டர் முன்பதிவுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் சலுகை பொருந்தும்.

மேலும் படிக்க...

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

பாம்பு மன்னனுக்கா இந்த நிலைமை? உயிருக்குப் போராட்டம்!

English Summary: If you have this feature, Free LPG Cylinder - Details Inside! Published on: 07 February 2022, 10:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.