எல்ஐசியில் பல்வேறு காப்பீட்டு முறைகள் உள்ளன. அதில் நமக்கு விருப்பமான காப்பீட்டு முறையை தேர்ந்தெடுத்து எந்த வித பயமும் இல்லாமல் நமது பணத்தை நம்மால் முதலீடு செய்ய முடியும். அதில் எளிய மக்களுக்கு மிகப் பெரும் அளவில் பயன் தரக்கூடிய திட்டமாக உள்ளது தான் எல்ஐசி-யின் 914 என்ற 71 ரூபாய் முதலீட்டு திட்டம். ஒரு நாளைக்கு 71 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் இந்த காப்பீட்டு திட்டத்தின் முடிவில் உங்களிடம் 48 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும்.
எல்ஐசி பாலிசி (LIC Policy)
எல்ஐசி தன்னுடைய முதலீட்டாளர்களுக்காக பல்வேறு விதமான காப்பீடு திட்டங்களை தன்னகத்தை கொண்டுள்ளது. அதில் பல திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளன. மேலும் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு காப்பீட்டு நிறுவனமாக இருப்பதால் பல தலைமுறைகளாக நம்பகத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாலும் பலர் எல்ஐசியில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். எல்ஐசி திட்டம் 914 ஆனது பல்வேறு விதங்களில் நல்ல லாபத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
தகுதிகள்
- எல்ஐசி-யின் இந்த திட்டத்தில் இணைவதற்கு 18 வயது முதல் 55 வயது வரை உள்ள எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
- காப்பீட்டு திட்ட முதிர்ச்சி காலமானது குறைந்தபட்சம் 12 ஆண்டு முதல் 35 ஆண்டுகள் வரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
- காப்பீட்டு தொகை ஒரு லட்சம் ரூபாய் வரை நீங்கள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.
இலாபம்
எல்ஐசி காப்பீட்டு திட்டத்தின் 914-ல் 18 வயது முதல் நீங்கள் தினம் 71 ரூபாய் முதலீடு செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். தினசரி 71 ரூபாய் முதலீடு செய்யும் போது ஒரு மாதத்திற்கு 2130 ரூபாயும், ஒரு வருடத்திற்கு 25,962 ரூபாயும் நீங்கள் முதலீடு செய்து இருப்பீர்கள். இந்த காப்பீட்டு திட்டத்தின் முதிர்ச்சி காலமானது 35 ஆண்டுகளாகும். எனவே காப்பீட்டு திட்டத்தின் உங்களுக்கு 48 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க
50,000 ரூபாய் இருந்தால் போதும்: ஈசியா இந்த தொழில் செய்யலாம்!
பெண்களுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை: இந்த மாநிலத்தில் தொடக்கம்!
Share your comments