மாநில அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட காலம் காத்திருந்த ஊழியர்களுக்கு, அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அகவிலைப்படி
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மத்திய அரசுடன் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கம். பணவீக்க விகித தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி குறித்து அரசாங்கம் முடிவெடுக்கிறது. அகவிலைப்படி உயர்வு என்பது பணவீக்கத்தைப் பொறுத்தே இருக்கும். எனவே , ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை ஊழியர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
எப்போது உயரும்?
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவுகளைக் கையாள அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை அரசு செய்து வருகிறது. எனினும் கொரோனா சமயத்தில் நிதி நெருக்கடியால் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை.
மத்திய அரசு ஊழியர்களும் மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். ஜூலை மாதத்தில் 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. இந்த அறிவிப்பு வெளியான பின்னர் பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேச அரசு
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்போது அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பை மத்தியப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அதன் பலன் கிடைக்கும்.
34 சதவீத அகவிலைப்படி
மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவலை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஊழியர்களுக்கு இனி 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவால் அங்குள்ள சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!
கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!
Share your comments