புதுடெல்லி: இந்தியாவின் பால்பண்ணைத் தொழில் உலகமயமாகி, இந்தியாவின் விவசாயத் தொழிலுக்கு பலத்தை அளித்துள்ளது, இது விவசாயத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சர்வதேச பால் கூட்டமைப்பு (அமெரிக்கா) தகவல் தொடர்பு மேலாளர் செபாஸ்டியன் டேட்ஸ் கூறினார்.
புது தில்லியில் உள்ள கிரிஷி ஜாக்ரன் ஊடக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கே.ஜே.சௌபல் நிகழ்ச்சியில் பேசுகையில், இந்த நாடு எங்களை அன்புடன் வரவேற்றது. இங்குள்ள கலாச்சாரம் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பால் தொழில் இன்று கிராமத்திலிருந்து உலக அளவில் வளர்ந்துள்ளது. இந்த கால்நடைத் தொழிலில் தொழில்நுட்பங்களும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன.
மக்கள் நட்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சி உத்திகள் மூலம் இந்தத் துறையிலிருந்து அதிக வருமானத்தைப் பெற முடியும். மேலும் பேசுகையில், இந்தியா பொதுவாக கிராமங்கள் நிறைந்த நாடு, விவசாயம் முதன்மையானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக இங்குள்ள சூழல் இந்த கால்நடை வளர்ப்பிற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. இத்தனை நன்மைகள் இருந்தால், பால் பண்ணையில் நமது கனவுகளை நிறைவேற்ற முடியும், என்றார்.
நாங்கள் இந்தியா வந்தபோது, இங்குள்ள மக்கள் எங்களை மிகவும் அன்புடன் வரவேற்றனர். இங்குள்ள கலாசாரம், பழக்கவழக்கங்கள் வித்தியாசமானது, மகிழ்ச்சியாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றொரு விருந்தினரான மாஸ்டர் நியூட்ரிஷனிஸ்ட் (பான் அமெரிக்கன் டெய்ரி ஃபெடரேஷன் உருகுவே) ரஃபேல் கோன்ஸ் கூறியதாவது: உலக விவசாயம் மற்றும் பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதுமட்டுமின்றி பாலில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் உடலுக்கு நல்ல உணவாக அமைகிறது. ரசாயனம் கலந்த பால் இன்று அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கிரிஷி ஜாகரனின் நிறுவனர் மற்றும் தலைமையாசிரியர் எம்.சி. டாம்னிக், இயக்குநர் ஷைனி டாம்னிக், நிறுவன விவகாரங்களின் துணைத் தலைவர் பி.எஸ். சைனி, சிஓஓ பி.கே.பந்த் மற்றும் கிருஷி ஜாகரன் ஊடக அமைப்பின் ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க:
தோட்டக்கலையின் இயந்திரமயமாக்கல் திட்டம்: டிரேக்டர் மற்றும் பவர் டில்லருக்கு மானியம்!
SSC(CGL) தேர்வுக்கான இலவச பயிற்சி இந்த வாட்ஸப் எண்ணை அணுகுங்கள்!
Share your comments