1. மற்றவை

சர்வதேச காகித தினம்: பல அரிய தகவல்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan

International Paper Day

"ஆயுதம் செய்வோம். நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம். கல்விச் சாலைகள் வைப்போம். ஓயுதல் செய்யோம். தலை சாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம். பல வண்மைகள் செய்வோம்" என ஆயுதத்திற்கு சமமாக காகிதத்தைக் கூறுகிறார் பாரதியார். காப்பதற்கு ஆயுதம் போல் கற்பதற்கு காகிதம் துணை புரிகிறது. உண்மையில் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் நிறைய பேருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் தான் புரட்சிக்கே வித்திட்டிருக்கின்றன. அன்று முதல் இன்று வரை கல்வி, கருத்து, கண்டுபிடிப்பு, செய்திகளை உலகத்தில் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக காகிதம் இருந்து வருகிறது.

காகித தினம் (Paper Day)

சர்வதேச காகித தினமான இன்று, காகிதம் பற்றிய பல தகவல்களை காண்போம். காகித உபயோகம் அன்று முதல் இன்று வரை நம் தினசரி வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ஒரு பொருள். இதன் பயன்பாடு இல்லாமல் ஒரு நாளைக் கூட நம்மால் கடக்க முடியாது. பகவத் கீதை, குர்ஆன், உலகப் பொதுமறை திருக்குறள் என புனித நுால்கள் அனைத்தும் காகித வடிவில் தான் நாம் பார்க்கிறோம். எனவே காகிதம் கற்க, கற்பிக்க உதவுகின்ற தத்துவங்கள் எடுத்துச் செல்கின்ற, மனிதனை பண்படுத்துகின்ற, உபன்யாசங்கள் எடுத்துச் சொல்கின்ற ஒரு புனிதமான பொருள்.

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு,தீப்பெட்டி தொழிற்சாலைக்கும் மட்டும் பெயர் பெற்றது அல்ல.காகித தயாரிப்புக்கும் பெயர் பெற்றது. வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து காகிதம் வாங்கப்பட்ட நிலையில் தற்சமயம் சிவகாசியில் இருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

நாளிதழ் (Newspaper)

காகிதம் என்பது எழுதுவதற்கும், அதன் மேல் அச்சிடுவதற்கும்,பொதி சுற்றுவதற்கும் பயன்படும் மெல்லிய பொருள் ஆகும். நாம் தினமும் உலங்கெங்கும் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள பெரும் உதவியாக இருப்பது நாளிதழ். அத்தகைய நாளிதழின் மூலக்காரணம் காகிதம் தான். எகிப்து நாட்டினர், முதன்முதலில் 'பப்ரைஸ்' என்ற தாளில் எழுதினர். அந்த பெயர்
நாளடைவில் மாறி 'பேப்பர்' என்று அழைக்கப்பட்டது. அரேபியர் காகிதத்தை 'காகத்' என்றனர். நாம் அதனை 'காகிதம்' எனவும், 'தாள்' எனவும் அழைக்கிறோம்.

மறுசுழற்சி (Recycling)

மரங்களை அழித்து தான் காகிதம் தயாரிக்கப்படுகிறது என்பது தவறான கருத்து. இந்தியாவில் 58 சதவீதம் மறுசுழற்சி முறையிலேயே காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அந்த மரங்களும் பேப்பர் மில் வைப்பவர்களால் வளர்க்கப்படும் மரங்களே. 17 சதவீதம் விவசாயக் கழிவுகளான கரும்புச்சக்கை, சோளத்தட்டை போன்றவற்றிலிருந்து காகிதம் தயாரிக்கப்படுகிறது.

பேப்பர் பதிவுகள் சிறந்தவை
கல்வி, மருத்துவம் உட்பட எந்த துறையாக இருந்தாலும் காகிதத்தின் பயன்பாடு
இன்றியமையாதது. சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழில் பிரசித்தி பெற்றது. ஆனால் இந்த தொழிலுக்கும் காகிதத்தின் பயன்பாடு முக்கியமானது. என்னதான் டிஜிட்டல் முறையில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டாலும் பேப்பரில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகச் சிறந்தது.

மேலும் படிக்க

பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லாகி போன மரம்: காட்சிக்கு வைப்பு!

சர்வதேச புலிகள் தினம்: புலிகள் பாதுகாப்பில் காடுகள்

English Summary: International Paper Day: Lots of rare information!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.