இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பான ‘டிஜிட்டல் பேங்கிங்’ (Digital Banking) நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சமூக ஊடக நுட்பங்கள், தொலைபேசி அழைப்புகள் என பலவற்றின் வாயிலாக மக்களை ஏமாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. எனவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, பொதுமக்களை ரிசர்வ் வங்கி (RBI) கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் போலியான தொலைபேசி அழைப்புகள், தெரியாத லிங்குகள், தவறான அறிவிப்பு செய்திகள், அங்கீகரிக்கப்படாத கியு.ஆர்., குறியீடுகள் (QR Codes) போன்றவை குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், ரிசர்வ் வங்கி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இணைய வழி மோசடி (Online Scam)
இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான தங்களது பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பணத்தை இழந்து விட்டு கவலை அடைவதை விட்டு, முன்னரே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
முன்னெச்சரிக்கை (Precautions)
மோசடி பேர்வழிகள், வங்கி கணக்குகள் சம்பந்தமான அடையாள எண், பாஸ்வேர்டு, டெபிட், கிரெடிட் கார்டுகள் குறித்த தகவல்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக, பல்வேறு விதமாக முயற்சிக்கின்றனர்.
எனவே, டிஜிட்டல் பேங்கிங் வாயிலாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, இழப்பை தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க
இரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங்: மத்திய அரசு திட்டம்!
முக்கிய அப்டேட்: இனி பிஎஃப் அக்கவுண்டில் நீங்களே இதை செய்து கொள்ளலாம்!
Share your comments