ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கார்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதை அடுத்து கார்களது வேகத்தை குறைக்கும் புதிய டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரானிக் சிஸ்டம் புதிதாகத் தயாரிக்கப்படும் கார்களில் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். மேலும் கார் ஓனர்கள் இதனை பழைய கார்களிலும் பொருத்திக்கொள்ளலாம்.
எலெக்ட்ரானிக் சிஸ்டம் (Electronic System)
இந்த எலெக்ட்ரானிக் சிஸ்டம் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் அதிக வேகத்தில் செல்லும் டிரைவர்களுக்கு எல்இடி திரையில் விஷுவல் எச்சரிக்கை சிக்னல் காட்டுவதோடு மட்டுமல்லாமல் காலுக்கு கீழ் பொருத்தப்படும் கியாஸ் பெடல் மெலிதான வைப்ரேஷனை வெளியிடும். இந்த வைப்ரேஷனை காலில் உணரும் டிரைவர் ஆக்ஸிலரேட்டை அழுத்தும் வேகத்தை குறைப்பார்.
நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து வாகனங்களிலும் இந்த சென்சார் சிஸ்டம் பொருத்தப்பட்டால் அனைத்து கார்களும் சீரான வேகத்தில் செல்லும். இதனால் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் குறையும் என ஐரோப்பிய யூனியன் தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
கடலை சுத்தம் செய்ய ரோபோ மீன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
இலவசங்கள் தொடர்ந்தால் நம் நாடும் இலங்கையாக மாறும்: நல்லசாமி எச்சரிக்கை!
Share your comments