என்னதான் இளமை காலங்களில் ஓடி, ஓடி சம்பாதித்தாலும், எதிர்காலத்தை குறிப்பாக ஓய்வு காலத்தை எண்ணி சேமிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவ்வாறு சேமித்தால்தான், நம் எதிர்கால சந்ததி முன்னிலையில், கவுரவமான வாழ்வை வாழ முடியும்.அதற்கு நடுத்தர வயதிலேயே, ஓய்வு காலத்தைக் கருத்தில்கொண்டு சேமிக்க வேண்டியது கட்டாயம்.
மத்திய அரசின் இந்த பென்சன் திட்டத்தில் சேர்ந்தால், ஓய்வுக் காலத்தில் கை நிறைய பென்சன் வாங்கலாம். ஓய்வுக்குப் பின்னர் கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ பென்சன் தொகை உதவியாக இருக்கும். அதற்கு ஒரு திட்டம் உள்ளது. அதில் இப்போதே சேர்ந்து முதலீடு செய்து பயன்பெறலாம்.
தேசிய பென்சன் திட்டம்
அதுதான் தேசிய பென்சன் திட்டம்.தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.
10% வட்டி
தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, ரூ.15 லட்சம் கோடி வரையில் வரிச் செலவு மிச்சமாகும்.
தகுதி
-
18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
-
தொடர்ச்சியான சேமிப்பின் மூலம் உங்களது 60ஆவது வயதுக்குப் பிறகு நிலையான பென்சன் தொகையைப் பெறமுடியும்.
இத்திட்டத்தில் டையர் 1, டையர் 2 என இரண்டு பிரிவுகள் உள்ளன.
-
டையர் 2 பிரிவில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமிப்புப் பணத்தை எடுக்கலாம்.
ரூ.60,000 பென்சன்
தேசிய பென்சன் திட்டத்தின் நீங்கள் தினமும் 60 ரூபாய் சேமித்து வந்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மாதத்துக்கு ரூ.5,000 பென்சன் கிடைக்கும். அதாவது வருடத்துக்கு ரூ.60,000 பென்சன் வாங்கலாம்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments