மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆண்டுக்கு 2 முறை
மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டும் ஜனவரி மாதம் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தப்பட்டது.
34% மாக உயர்ந்தது
2021 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 17 சதவீதம் மற்றும் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 2022 மார்ச்சில் 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ரூ. 9,544 கோடி செலவு
இதற்காக ரூ. 9,544 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் 46.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.63 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் 4 %
இந்த நிலையில், வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மார்ச்சில் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 6.95 சதவீதமாக அதிகரித்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக உயர்த்தப்படலாம் எனக் கருதப்படுகிறது.
எவ்வளவு உயரும்
அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டால், 56,900 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 21,622 ரூபாயாக உயரும்.
மேலும் படிக்க...
இலவச மிதிவண்டி - தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!
அமலுக்கு வந்தாச்சு பழைய ஓய்வூதியத் திட்டம்-மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!
Share your comments