மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், பணக் கொள்கைக் குழு கூட்டம் துவங்கியது. மூன்று நாள் நடக்கும் இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இறுதியாக, 2020 மே 22ல் ரெப்போ வட்டி குறைக்கப்பட்டது. அது முதல் வட்டி விகிதம், 4 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்கிறது.
ரெப்போ வட்டி விகிதம் (Repo Interest Rate)
‘பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யாது’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அறிக்கை தெரிவிக்கிறது. ‘வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா, இல்லையா என்பதை நாளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும்.
இந்தியாவில் இருக்கும் வணிக வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்குச் செலுத்தும் வட்டி தான் ரெப்போ ரேட்.
இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடம் இருந்து பெறும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி தான் ரிவர்ஸ் ரெப்போ ரேட்.
பொதுவாக ரிசர்வ் வங்கி தன் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால், நாம் வங்கிகளில் வாங்கும் கடன்களின் வட்டி விகிதங்கள் குறையும். ஏற்கனவே வாங்கி இருக்கும் கடன்களுக்கு நாம் செலுத்தும் வட்டி குறையும். அதோடு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குக்கான வட்டி விகிதங்களும் குறையும்.
இதுவே ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி அதிகரித்தால், வங்கிகளில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கும், அதே போல, ஏற்கனவே நாம் வாங்கி இருக்கும் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை: மத்திய அரசு!
நகைக்கடன் தள்ளுபடியில் புதிய நிபந்தனைகள்: ஏமாற்றத்தில் மக்கள்!
Share your comments