மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 6% வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால், ஆகஸ்ட் மாத சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போகிறது. ஏனெனில், ஜூலை மாதமான தற்போது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த சுற்று அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2 முறை
தினசரி வாழ்க்கையில் மக்களின் செலவு அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், முதல் DA உயர்வு ஜனவரியிலும், அடுத்தது ஜூலை மாதத்திலும் வெளியிடப்படும்.
சமீபத்திய அறிக்கைகள்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படலாம். ஏனெனில் இந்த முறை 5 சதவீத அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 சதவீத உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஏஐசிபிஐ
ஏஐசிபிஐ குறியீட்டு எண்களில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். அதற்குக் காரணம், DA மற்றும் Dearness Relief (DR) உயர்வுகளுக்கான எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு, எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்வு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DA 40%
பிப்ரவரி முதல், ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதத்திற்கான புள்ளிவிவரங்களின்படி குறைந்தது 6 சதவீதம் உயர்வு இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி, அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டால், 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 40 சதவீதமாக உயரும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6% அகவிலைப்படி உயர்வு
ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, மே மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முறை 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், 6% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, ஒட்டுமொத்தமாக ஜூன் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு குறையவில்லை என்றால், அகவிலைப்படி 6% அதிகரிப்பது உறுதி என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க...
தனியார் மருத்துவமனைகளிலும், பூஸ்டர் தடுப்பூசி இலவசம்தான்- அமைச்சர் பேட்டி!
பீர் ப்ரியர்களுக்கு நீரிழிவுநோய், இருதய நோய் வராது- ஆய்வில் கண்டுபிடிப்பு!
Share your comments