பெரும்பாலான சமூகவலைதளங்கள் தங்களது பயனர்கள் வருமானம் ஈட்ட வழிவகை செய்திருக்கிறது. அதன்படி, இன்ஸ்டாகிராமில் எப்படி பிரபலமாவது, எப்படி வருமானம் ஈட்டுவது என்பது குறித்து விரிவாக பார்ப்போம். இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்துவிட்டால் ஃபாலோயர்கள் எண்ணிக்கை என்பது முக்கியமான ஒன்றாகும். இன்ஸ்டாவில் பணம் சம்பாதிக்க மற்றொரு முக்கியமான விஷயம் "ஆக்டிவ்" ஆக இருப்பது. இன்ஸ்டா கணக்கில் தனித்துவமான மற்றும் புது புது கன்டென்ட்களை தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கணக்கை பின்தொடர்பவர்களை செயலில் வைத்திருக்கவும் அதிகரிக்கவும் இது பெரிதும் உதவும்.
ஃபாலோயர்கள் எண்ணிக்கை (Followers Count)
சுறுசுறுப்பாக இயங்கி புதுப்புது கன்டென்ட்களை பதிவிடும் கணக்கை தான் நிறுவனங்களும் கவனிக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தாலே ஃபாலோயர்கள் எண்ணிக்கை தானாக அதிகரிக்கும். உங்களது இன்ஸ்டாகிராம் கணக்கை பிரபலமாக்க மற்றொரு முயற்சி பார்ட்னர்ஷிப் உருவாக்குவது. அதாவது ஏற்கனவே இன்ஸ்டாவில் பிரபலமானவர்களுடன் இணைந்து உங்கள கன்டென்டுகளை பதிவிடுங்கள். இதன்மூலம் குறிப்பிட்ட அளவான ஃபாலோயர்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள். இதற்கு கன்டென்ட் மற்றும் பிராண்ட் என்பது மிக முக்கியம்.
தொடர்ந்து உங்களுக்கான ஒரு குழுவை உருவாக்கி உறுப்பினர்களிடையே எப்போதும் தொடர்பில் இருங்கள். உங்கள் குழுவில் பயனர்கள் கேட்கும் கேள்விக்கு முறையான பதில் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இதன்மூலம் உங்கள் குழு எண்ணிக்கையும் விரிவடையும். அவ்வாறு விரைவடைவதனால், லைக்குகளும் அதிகரிக்கும், புதிய ஃபாலோயர்களும் உங்கள் கணக்கில் இணைவர். அதேபோல் நீங்கள் பதிவிடும் கன்டென்ட்களுக்கு கொடுக்கும் ஹேஷ்டேக் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும். கன்டென்ட்டுக்கு ஏற்ற சரியான ஹேஷ்டேக்கை பதிவிட்டால் அது அதிக பயனர்களை சென்றடையும். தினமும், என்னென்ன டிரெண்டிங் விஷயங்கள் நிகழ்கிறது என்று கவனித்துக் கொண்டே இருங்கள், அதோடு உங்கள் கன்டென்டை தொடர்புப்படுத்தி பதிவிடுங்கள். இதன்மூலமும் ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வருமானம் (Income)
ஏற்கனவே சொன்னது போல உங்கள் கணக்கை பிரபலபடுத்த முக்கியமான ஒன்று ஃபாலோயர்கள் தான். ஃபாலோவர்கள் அதிகரிக்கும் போது, சிறு தொழில் செய்பவர்கள் தங்களின் விளம்பரங்களை பிரமோட் செய்வதற்காக உங்களுடன் இணைவர். இன்ஸ்டாவில் ஸ்பானசர் செய்யப்பட்ட பதிவுகளை உங்கள் கணக்கில் விளம்பரமாக வெளியிடுங்கள். பார்வையாளர்களுக்கு ஏற்ப வருமானம் வரத் தொடங்கும். மேலும் பதிவிடும் கண்டென்டுகளை கவனமாக பதிவிடுங்கள். இல்லையென்றால் இணையவாசிகளிகளின் ட்ரோல்களுக்கு ஆளாகிவிடுவீர்கள்.
மேலும் படிக்க
இராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஐபோன்!
உடல் ஆரோக்கிய நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸ்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
Share your comments