1. மற்றவை

உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க இதைப் பண்ணுங்க!

R. Balakrishnan
R. Balakrishnan
Lost your Aadhar Card?

இந்தியர்கள் அனைவருக்குமே ஆதார் (Aadhar) என்பது கட்டாயமான ஒன்றாகும். ஆதார் இல்லாமல் அரசின் மானியம், உதவித் தொகை போன்ற எதுவுமே கிடைக்காது. இந்தியாவில் உயிர்வாழ வேண்டுமானால் ஆதார் கார்டு இருந்தால் தான் என்ற நிலைமை கிட்டத்தட்ட வந்துவிட்டது. அந்த அளவுக்கு ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரயிலில் பயணம் செய்வது முதல் தடுப்பூசி (Vaccine) வரை ஆதார் அவசியம்.

ஆதார் கார்டு (Aadhar Card)

இப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வீர்கள்? கவலையே வேண்டாம். பத்தே நிமிடத்தில் உங்களுக்கு ஆதார் கார்டு கிடைத்துவிடும். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக டவுன்லோடு செய்யலாம்.

வழிமுறை (Procedure)

  • ஆதார் அமைப்பின் https://uidai.gov.in/. என்ற வெப்சைட்டில் சென்று Download Aadhaar -->> Get aadhaar என்ற வசதியை கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும். ஆதார் நம்பர் இல்லாவிட்டால் 16 இலக்க விர்ச்சுவல் ஐடி நம்பரை பதிவிட வேண்டும்.
  • இதன் பிறகு செக்யூரிட்டி கோடு நம்பரைப் பதிவிட்டு ‘send OTP' கொடுக்க வேண்டும்.
  • உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிட்டு 'verify and download' கொடுக்க வேண்டும்.
  • இப்போது ஸ்கீரினில் தோன்றும்‘Preview Aadhaar Letter’ என்பதில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
  • ஆதார் கார்டை டவுன்லோடு செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த டிஜிட்டல் ஆதார் கார்டை நீங்கள் PDF வடிவில் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க

அவசரகால நிதியை எப்பொழுது பயன்படுத்தலாம்?

வலிப்பு நோய்க்கு நிரந்தர தீர்வு: மருத்துவர் விளக்கம்!

English Summary: Lost your Aadhar card? Don't worry, do it! Published on: 07 December 2021, 07:07 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.