இன்னும் ஒரு நாள்தான்! புதிய நிதியாண்டு நாளை சனிக்கிழமை, ஏப்ரல் 1, 2023 அன்று தொடங்கும். பான்-ஆதார் இணைப்பு, டீமேட் கணக்குகளில் நாமினிகளைச் சேர்ப்பது போன்றவற்றுக்கான கடைசி தேதியை நீட்டித்து கோடிக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. அடுத்து (LPG) எல்பிஜி விலையில் ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதிகரிக்கவா அல்லது குறைக்கவா? எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளை ஏப்ரல் 1, 2023 அன்று சரிபார்க்கலாம், ஏனெனில் பெட்ரோலிய நிறுவனங்கள் புதிய நிதியாண்டின் முதல் நாளில் விலைகளை புதுப்பிக்கின்றன.
இருப்பினும், இந்த ஆண்டு உள்நாட்டு (LPG) எல்பிஜி சிலிண்டர் விலை ₹103 ஆகவும், வணிக சிலிண்டரின் விலை ₹134 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 31, 2023 அன்று உள்நாட்டு (LPG) எல்பிஜி சிலிண்டர் விலைகளைப் பாருங்கள்:
நகரத்தின் பெயர் விலை | (ரூ) |
சென்னை | ரூ.1,118.5 |
டெல்லி | ரூ.1,103 |
கொல்கத்தா | ரூ.1,129 |
பெங்களூரு | ரூ.1,115.5 |
மும்பை | ரூ.1,112.5 |
அகமதாபாத் | ரூ.1,110சண்டிகர் |
சண்டிகர் | ரூ.1,112.5 |
மேலும் படிக்க:
ஆண் குழந்தைகளுக்கான தபால் அலுவலக திட்டம்: இன்றே தொடங்குங்கள்!
IRCTC-யின் புதிய மெனு கார்டில் தினை அடிப்படையிலான உணவு சேர்ப்பு
ஒவ்வொரு குடும்பமும் ஒரு வருடத்தில் தலா 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெறலாம். அதையும் தாண்டி வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டர்களை சந்தை விலையில் கூடுதலாக வாங்க வேண்டும். PAHAL (எல்பிஜியின் நேரடி நன்மை பரிமாற்றம்) திட்டத்தின் கீழ், நுகர்வோர் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுகிறார்கள். மானியம் அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்ததை அடுத்து, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் LPG சிலிண்டர் மானியம் ₹200 மானியத்தை, இந்த மாத தொடக்கத்தில் அரசு, ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, PMUY-ன் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 ரீஃபில்களுக்கு 14.2 கிலோ சிலிண்டருக்கு ₹200 மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்று I&B அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
ஆண் குழந்தைகளுக்கான தபால் அலுவலக திட்டம்: இன்றே தொடங்குங்கள்!
IRCTC-யின் புதிய மெனு கார்டில் தினை அடிப்படையிலான உணவு சேர்ப்பு
Share your comments