ஒரு காலத்தில் பெண்கள் அடுப்பில் வெந்து சமைக்க வேண்டியிருந்தது, அதிலும் முக்கியமாக வேரகு அடுப்பில் சமைப்பது பெரிய சவாலாகவே இருந்தது. தற்போது அந்த நிலை மாறி பல புதிய தொழில்நுட்பங்களுடன் முன்னேறி செல்கிறோம். இதைத் தொடர்ந்து நமக்கு இருக்கும் பெரிய பிரச்சனை எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை தான்.மேலும், அதற்கு பெறக் கூடிய மானியம் வந்து விட்டதா? இல்லையா? என்பது நம்மில் பலருக்கு இருக்கும் சந்தேகமாகும். எனவே, இது குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: தமிழ்நாடு CM Fellowship 2022-24: ரூ.50000 வரை உதவுத் தொகை! அறிந்திடுங்கள்!
நாட்டின் ஏழை மற்றும் நலிந்த பொருளாதாரப் பிரிவினருக்கு எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாக இணைக்கும் திட்டத்தை மத்திய மோடி அரசு தொடங்கியது. இத் திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவாகும்.
சில காலமாக நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் வாழ்வாதாரத்தில் சிரமங்களை மேற்கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, மத்திய மோடி அரசு தலைமையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த வாரம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவித்தார். இந்த அறிவிப்புடன், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு 200 ரூபாய் கூடுதல் மானியத்தையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் இந்த திட்டத்தின் பயனாளியாக இருந்தால், வீட்டிலேயே உட்கார்ந்த படி, உங்கள் கணக்கில் பணம் வருகிறதா இல்லையா என்பதை ஆன்லைன் மூலமாக மிகவும் சுலபமாக தெரிந்துகொள்ளலாம். எப்படி வாருங்கள் பார்ப்போம்.
மேலும் படிக்க: இலங்கைக்கு நிபந்தனை விதித்த உலக வங்கி! ஏன்?
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
எப்படி செக் செய்வது?
* முதலில் www.mylpg.in கிளிக் செய்யவும்.
* அதில் வலது பக்கத்தில் கேஸ் சிலிண்டரின் புகைப்படத்தைக் பார்க்க முடியும். அதை கிளிக் செய்யவும்.
* அடுத்து சேவை வழங்குநர் நிறுவனம் (Distributer) என்பதில் கிளிக் செய்து முன்னேறவும்.
* ஒரு புதிய பக்கம் திறக்கும், அதை கிளிக் செய்துக்கொள்ளவும்.
* இங்கு சைன் இன் மற்றும் நியூ யூசர் என்ற ஆப்ஷன் (Option) தோன்றும். அதை கிளிக் செய்யவும்.
* இதற்கு முன்னறே ஐடி வைத்திருப்பவர் என்றால், சைன் இன் என்பதைக் கிளிக் செய்யவும் இல்லையெனில் நியூ யூசர் என்பதை கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு, உங்கள் முன் இருக்கும் சிலிண்டர் முன்பதிவு வரலாற்றைக் (History) கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு, எந்தெந்த சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் கிடைத்துள்ளது என்பதைச் சரிபார்த்திடலாம்.
* நீங்கள் மானியம் பெறவில்லை என்றால், பீட்பேக் விருப்பத்தை கிளிக் செய்து, அதில் புகார் அளிக்கலாம்.
* கூடுதல் தகவலுக்கு 18002333555 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு, உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
யாருக்கலாம் மத்திய அரசின், இந்த மானியம் பயன்தாராது, என்பதைத் தெரிந்துக்கொள்ள, மேலும் படிக்கவும்.
மேலும் படிக்க: தமிழகம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 சரிவு! விலை நிலவரம்!
யாருக்கு கிடைக்காது?
மத்திய அரசின் இந்த மானிய அறிவிப்பு, ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. அதாவது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே, அரசின் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே 200 ரூபாய் மானியம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எலுமிச்சையின் முக்கியத்துவம்!
7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தில் பம்பர் ஏற்றம்
Share your comments