வேகவைத்த கானாங்கெளுத்தி மீன், இனிப்பு சாஸில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி உள்பட இன்னும் சில ஜப்பானிய உணவு வகைகள் விண்வெளி வீரர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டது.
ஹோட்டல் உணவு (Hotel food)
ஆசை ஆசையாக அலங்காரம் செய்துகொண்டு, என்னென்ன உணவெல்லாம் ஆர்டர் செய்து சாப்பிடலாம் எனக் கனவுகண்டு ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது.
ஏனெனில், நீங்கள் தேர்வு செய்யும் ஹோட்டலில் இருந்து, உங்கள் மனம் சுவைக்க விரும்பும் உணவுகளை உங்களது இடத்திற்கே உடனடியாகக் கொண்டுவந்து டெலிவரி செய்யும் வசதி தற்போது வந்துவிட்டது. அதுதாங்க ஆன்லைன் டெலவரி. இதற்கான முன்பதிவை, ஆன்லைனில் செய்தாலே போதுமானது. இதனை நம்மில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
விண்வெளிக்கு டெலிவரி
ஆனால், இதே ஆன்லைன் டெலிவரி வசதியைப் பயன்படுத்தி விண்வெளிக்கும் உணவுப் பொருட்களை டெலிவரி செய்து அசத்தியுள்ளது ஒரு நிறுவனம். ஜப்பானைச் சேர்ந்த யுசாகு மேசாவா என்ற விண்வெளி சுற்றுலாப் பயணி, ஆன்லைன் உணவு டெலிவரியை விண்வெளியில் செய்துள்ளார். டப்பாவில் அடைக்கப்பட்ட உணவை விண்வெளி வீரர்களுக்கு வழங்கி அசத்தியுள்ளார்.
வீடியோ வெளியீடு (Video release
இம்மாதம் 11ம் தேதியன்று காலை 9.40 மணிக்கு, வானில் 248 மைல் தூரத்தை 8 மணி நேரம் 34 நிமிடங்களில் கடந்து இது சாத்தியமாகி உள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான உபெர் ஈட்ஸ் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
விண்கலத்தில் இருக்கும் ஒரு கதவை திறந்து, இவர் உணவை கொடுக்கின்றார்.
உணவு பொட்டலம் மிதந்தபடி அவர் முன்னே செல்கிறது. அந்தப் பொட்டலத்தை விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விண்கலத்திற்குள் கொடுக்கிறார். விண்வெளி வீரர் அந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டு விரல் சைகை மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
கானாங்கெளுத்தி மீன்
அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகளில், வேகவைத்த கானாங்கெளுத்தி மீன், இனிப்பு சாஸில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. இந்த உணவுகளை தனது சொந்த செலவில் விண்வெளி வீரர்களுக்கு விருந்தாக கொடுத்துள்ளார் யுசாகு மேசாவா.
உபெர் ஈட்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பதிவில், “நாங்கள் இந்த உலகிலேயே இல்லை. எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்” என்று பதிவிட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உணவு பொட்டலத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
மேலும் படிக்க...
காய்கறி பயிர்களுக்கு இலவச இடுபொருள் - விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments