1. மற்றவை

தீயாய் வேலை செய்ய உதவும் தீக்குச்சி மரங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Match trees to help fire work!
Credit : Dinamani

மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில், தீக்குச்சி மரங்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.

தீக்குச்சி மரங்கள் (Match trees)

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது இந்த மரங்கள் பிரபலம் அடைந்து வருகின்றன. குறிப்பாக மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் பீநாரி என்ற தீக்குச்சி மரங்களை வளர்க்க இப்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் .

5 ஆண்டுகளில் பலன் (Benefit in 5 years)

அய்லாந்தஸ் எக்சல்சா எனத் தாவர வியல் பெயர் கொண்ட இம்மரம் ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டது. இது 5 ஆண்டுகளுக்கு பின்னர் வளர்ந்த மரத்தை வெட்டி தீக்குச்சி, மரப்பெட்டி பொம்மைகள்
தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

விலை (Price)

ஒரு டன் மரத்தின் விலை ரூ.5000க்கு மேல் விலைபோகும்.மென்மையான மரம் என்பதால் அறுப்பதும் எளிது. இதர வேலைபாடுகளை மேற்கொள்வதற்கும் உகந்தது.

தற்போது பெய்து வரும் மழைக்காலத்தைப் பயன்படுத்தி, எளிதில் நடவு செய்து கொள்ளலாம். ஏனெனில் இந்த மரத்தைப் பொருத்தவரை, மழைக்காலம்தான் நடவு செய்ய ஏற்றது.

பராமரிப்பது எளிது (Easy to maintain)

  • இந்த மரங்களை விலங்குகளிடம் இருந்து பராமரிப்பது மிக மிக எளிது. ஏனெனில், இதன் இலைகளை ஆடு மாடுகள் உண்ணாது.

  • பயிர் பாதுகாப்பு என்பதும் தேவையில்லாத ஒன்று.

  • வனத்துறையிடம் இருந்து இந்த மரங்களை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

விழிப்புணர்வு (Awareness)

இதற்கான சிறந்த வாய்ப்பை வனத்துறை அளிக்கிறது. இந்த மரத்தின் தேவை, வணிகம் குறித்து விவசாயிகளிடத்தில் தற்போது ஆர்வம் ஏற்பட்டு வருகிறது.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும்படிக்க...

குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வலிப்பு நோய்க்கு நிரந்தர தீர்வு: மருத்துவர் விளக்கம்!

English Summary: Match trees to help fire work! Published on: 14 December 2021, 10:03 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.