1. மற்றவை

மருத்துவ காப்பீடு பாதுகாப்பு: மேம்படுத்தும் வழிமுறைகள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Medical Insurance Security

மருத்துவ செலவுகளை ஈடு செய்ய காப்பீடு பெற்றிருப்பதோடு, அந்த பாதுகாப்பு போதுமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான பாதுகாப்பாக மருத்துவ காப்பீடு பாலிசி அமைகிறது. எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்க மருத்துவ பாலிசி (Medical Insurance Policy) கைகொடுக்கிறது. மருத்துவ பாலிசி தொடர்பான விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பெருந்தொற்று சூழல் இதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் புரிய வைத்துள்ளது.

மருத்துவ காப்பீடு பாலிசி

மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், காப்பீடு அளிக்கும் பாதுகாப்பு அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்திருப்பது அவசியம். இதன் மூலம் மருத்துவ அவசர நிலையை சரியாக எதிர்கொள்ளலாம்.

பாலிசி புதுப்பித்தல்

காப்பீடு பெறுபவர்கள், தேவையான பாதுகாப்பை அளிக்கும் வகையிலான பாலிசியை தேர்வு செய்வது அவசியம். பாலிசியின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சிகிச்சைக்கான மருத்துவமனை வலைப்பின்னல் வசதி உள்ளிட்டவற்றை பரிசீலித்து, பொருத்தமான பாலிசியை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே பாலிசி பெற்றிருப்பவர்களும் தங்களுக்கான பாதுகாப்பு போதுமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பாலிசிக்கான ’சம் அஷ்யூர்டு’ தொகை குறைவாக இருந்தால் அதை அதிகரிப்பது நல்லது. பாலிசியை புதுப்பிக்கும் வாய்ப்பை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொதுவாக காப்பீடு நிறுவனங்கள் பாலிசியை புதுப்பிக்கும் போது, பாதுகாப்பு தொகையை அதிகரிப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றன.அதிக பாதுகாப்பு தேவை என உணர்ந்தால், பாலிசியை புதுப்பிக்கும் போது, பாதுகாப்பு தொகையை உயர்த்திக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

பாலிசி தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதால், காத்திருப்பு காலம் இல்லாமலே அதிக பாதுகாப்பை பாலிசிதாரர் பெறலாம் என்பது இந்த முறையில் உள்ள அனுகூலமாகும். அதிக பாதுகாப்பிற்காக புதிய பாலிசியை நாடுவதை விட இது ஏற்றதாக இருக்கும். இதே போல ‘சூப்பர் டாப் அப்’ வசதியையும் நாடுவது பொருத்தமாக இருக்கும்.

குடும்ப பாலிசி

பாலிசிகளுக்கான சூப்பர் டாப் அப் வசதி, மருத்துவமனை செலவுகள் பாலிசி அளிக்கும் தொகையை விட அதிகமாக இருக்கும் போது கைகொடுக்கும். மருத்துவமனை செலவுகள், பாலிசி தொகையை விட அதிகமாக இருக்கும் போது மட்டுமே இந்த வசதி அமலுக்கு வரும். ஏற்கனவே உள்ள காப்பீடு நிறுவனத்திடம் இருந்தே இந்த வசதியை பெறுவது நல்லது. இந்த வசதியின் கீழ், மருத்துவ சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், ஏற்கனவே உள்ள நோய்கள், குழந்தைகள் நல சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது.

போதுமான காப்பீடு பெறுவதற்கான மற்றொரு வழி, குடும்பத்தினர் அனைவருக்குமான விரிவான காப்பீடு பாலிசியாகும். ஒவ்வொருவருக்குமான தனித்தனி பாலிசி வாங்குவதை விட, குடும்பம் முழுவதற்குமான பாலிசியை வாங்குவது ஏற்றதாக இருக்கும். குடும்ப மருத்துவ காப்பீடு பாலிசியில், ஒரு பிரிமியம் செலுத்தி, அனைத்து பலன்களையும் பெறலாம். குடும்பத்தின் மூத்த உறுப்பினர் வயதின் அடிப்படையில் பிரிமியம் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

புதிய பாலிசிகள் வாங்கும் போது அண்மை கால அம்சங்களையும் பெறும் வசதி இருக்கிறது. இவை தவிர, பாலிசியை வேறு ஒரு காப்பீடு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். இதற்கு முன், பிரிமியம் மற்றும் இதர அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

WhatsApp செயலியில் கேஷ்பேக்: சலுகையை பெறுவது எப்படி?
நிதி இலக்கில் முதலிடம் பெற்ற அவசர கால நிதி!

English Summary: Medical Insurance Security: Improving Steps! Published on: 02 November 2021, 09:20 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.