நம்முடைய அன்றாடப் பணிகளை, பணப்பரிவர்த்தனையை எளிதாக்க எத்தனையே தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. மறுபுறம், நம்மை ஏமாற்றும் ஆசாமிகளும் தகுந்த தொழில் நுட்பங்களுடன் வலம் வருவது வாடிக்கையாகி விட்டது. இது அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் உள்ள சிக்கல்.
அந்த வகையில், மகாராஷ்டிராவில் போலி வெப்சைட் தொடங்கி மின்கட்டணம் வசூலித்த ஆசாமிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் செயலிகள் மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. Google pay. Paytm உள்ளிட்ட செயலிகள் வழியாக வீட்டில் இருந்தபடியே மின்கட்டணங்களைச் செலுத்த முடியும்.
ரூ.65 ஆயிரம்
இதனை வைத்து முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோ நிறுவன லிமிட்டெட் தளத்தைப்போல் போலி வெப்சைட் ஒன்றை உருவாக்கிய அந்த கும்பல், வாடிக்கையாளர்களின் தொலைபேசிக்கு, மோசடியாக உருவாக்கிய வெப்சைட்டில் இருந்து மின் கட்டணம் செலுத்துமாறு மெசேஜ் அனுப்பியுள்ளனர். எச்சரிக்கை மெசேஜ் என அவர்கள் அனுப்பியதால், உண்மையென நம்பிய பலர் அந்த வெப்சைட் மூலம் பணத்தை செலுத்தியுள்ளனர். மொத்தமாக 65,648 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
பின்னர் இது போலி என்பதை அறிந்து கொண்ட பலர், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்தனர். பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் புகார்கள் குவிந்ததால், சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், ஜார்க்கண்டைச் சேர்ந்த கும்பல் இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மகாராஷ்டிரா பகுதியில் இருக்கும் மொபைல் எண்களை முறைகேடாகப் பெற்று, இந்த மோசடியை அரங்கேற்றியது அம்பலமானது.
மேலும் படிக்க...
எல்லாக் கொரோனா வைரஸையும் தடுக்கும் ஒரேத் தடுப்பூசி!
தாமதமாக வந்த ஆசிரியர்கள் - தடாலடியாகக் கட்டாய விடுப்பு கொடுத்த CEO!
Share your comments