பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் விதமாக கோவை ரயில்வே ஸ்டேஷனில், இந்திய லேடிஸ் சர்க்கிள் சங்கத்தின் லேடிஸ் சர்க்கிள் 7 சார்பில், கருவி ஒன்று பொருத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன், ரூ.3.5 லட்சம் மதிப்பிலான இக்கருவி, அமைப்பின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நிறுவப்பட்டது. இதனால், வீணாகும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும்.
பிளாஸ்டிக் மறுசுழற்சி (Plastic Recycling)
இந்திய லேடிஸ் சர்க்கிள் சங்கத்தின், ஏரியா, 7 சமூக பொறுப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ மரகதம் கூறியதாவது:
இக்கருவியில், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை போட்டால், அவை துண்டுகளாக வெட்டப்பட்டு பின்னால் உள்ள பெட்டியில் சேகரமாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவை சேகரிக்கப்பட்டு, நுாலாக மாற்றப்பட்டு ஆடை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக, பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி கருவியை கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் ராகேஷ்குமார் துவக்கி வைத்தார். லேடிஸ் சர்க்கிள் சங்கத்தின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபல் அயன், ஏரியா 7 அமைப்பின் தலைவர் பிரியங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க
Share your comments