இளம் தலைமுறையினர் தற்போது சமூக வலைதளங்களில் தான் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்களின் வருகை அதிகரித்து வருவதால், அடிக்கடி, அப்டேட்களை புதுப்பித்து வருகிறது சமூக வலைதளங்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் அப்டேட் (Instagram Update)
இன்ஸ்டாகிராமில் இளைஞர்கள் அதிக நேரத்தை செலவிட்டு எப்போதும் பிஸியாகவே இருக்கின்றனர். புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் என பயனாளர்கள் செய்யாத செயல்கள் இல்லை. இருப்பினும், அன்றைய நாளில் நாம் செல்கின்ற இடங்கள், உண்ணும் உணவுகள், பார்த்து ரசிக்கும் படங்கள் போன்றவற்றை இன்ஸ்டாகிராமில் ஸ்டாரியாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதனை, நண்பர்களுக்கு தெரிவிப்பதும் வாடிக்கையாகி விட்டது.
மொபைல் போனில் எடுக்கப்பட்ட 10 புகைப்படங்களையும் ஸ்டாரியில் பதிவிட்டு வரும் பயனாளர்களுக்காக, புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம். இந்த வசதியின் பெயர் show all.
இந்த புதிய வசதியின் படி, பயனர் ஒருவர் அதிகமாக ஸ்டோரி பதிவிடும் போது, முதலில் பதிவிடப்பட்ட மூன்று ஸ்டோரிகள் மட்டுமே, அவர்களது ஃபாலோயர் கணக்கில் காட்சியளிக்கும். மீதமுள்ள ஸ்டோரிகள் அனைதுதம் மறைக்கப்பட்டிருக்கும். அதனை பார்க்க விருப்பம் கொண்டால், திரையில் காணப்படும் ‘Show all’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இல்லையென்றால், தானாக 3 ஸ்டோரிக்கு பிறகு, அடுத்த பயனரின் ஸ்டோரிக்கு தாவி விடும்.
புதிய வசதி (New Feature)
இந்த புதிய வசதியை, பிரேசில் வாசி Phil Ricelle என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வசதி தற்போதைக்கு, ஒரு சில பிரேசில் நாட்டு பயனாளர்களுக்கு சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த வசதி அமலுக்கு வந்து விட்டால், பயனாளர்கள் பதிவிடும் முதல் மூன்று ஸ்டாரிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவை மூன்றும் ஆர்வத்தை துண்டினால் மட்டுமே அடுத்த ஸ்டோரிகளை காண Show all பட்டன் கிளிக் செய்யப்படும்.
தற்போதைக்கு, இன்ஸ்டாகிராமில் பயனாளர் ஒருவர் 100 ஸ்டோரி வரை பதிவிட முடியும். புதிய Show all வசதி வந்தாலும், ஸ்டோரி பதிவிடுகையில் அதிகப்பட்ச எண்ணிக்கை என்பதில் மாற்றம் வராது என தெரிகிறது.
மேலும் படிக்க
Share your comments