டிஜிட்டல் பிரமாணச் சான்றிதழ் சமர்ப்பிக்கும் கடைசி தேதி:
இன்னும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்காத ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கான முக்கியமான அப்டேட் இங்கே வருகிறது. ஓய்வூதியம் பெறுவோர் ‘ஜீவன் பிரமாண பத்திரம்" சமர்ப்பிக்க நவம்பர் 30 கடைசி நாள் ஆகும். குறிப்பிடத்தக்க வகையில், டிஜிட்டல் பிரமாணச் சான்றிதழ் என்பது கட்டாய ஓய்வூதியதாரர் அதாவது ஒவ்வொரு ஓய்வூதியம் பெறுபவரும் தாங்கள் இறக்கவில்லை என்பதை உறுதி செய்ய இதனை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் இதன் மூலம் ஓய்வூதிய வசதிகளை தொடர்ந்து பெற முடியும்.
உயிருடன் இருக்கும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் EPS-95 (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்-1995) இன் கீழ் டிஜிட்டல் பிரமாணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் அக்டோபர் 1 முதல் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது மற்றும் இரண்டு மாதத்திற்குள் இதனை சமர்ப்பிக்க வேண்டும். 80 வயதிற்குட்பட்டவர்களுக்கு, இந்த விதி நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் இதனை சமர்ப்பிக்க நவம்பர் 30 வரை அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுளளது.
காலக்கெடு நெருங்கி வருவதால், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் பிரமாணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க தங்கள் உள்ளூர் தபால் அலுவலகம் அல்லது வங்கிக்குச் செல்ல வேண்டும். மறுபுறம், வீட்டு வாசலில் வங்கிச் சேவை மற்றும் ஆன்லைன் சமர்ப்பிப்பு ஆகியவை கிடைக்கின்றன, இதன் மூலம் இந்த வேலையை நீங்கள் முடித்து கொள்ளலாம்.
டிஜிட்டல் பிரமாணச் சான்றிதழ் என்றால் என்ன?
ஓய்வூதியதாரர்கள் இருப்பதற்கான ஒரு அத்தியாவசிய ஆவணம் இது அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதற்கான சான்றாக இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோகஸ்தர் அல்லது வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற நிறுவனங்களுக்கு முன் டிஜிட்டல் பிரமாணச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் ஓய்வூதியதாரரின் மரணத்திற்குப் பிறகும் பணம் செலுத்தபடுகிறதா என்பதை உறுதி செய்கிறது.
பிரமாணச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது எப்படி:
ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் பிரமாணச் சான்றிதழ்களை ஜீவன் பிரமாண இணையதளம் (https://jeevanpramaan.gov.in/) அல்லது ஆப் மூலம் சமர்ப்பிக்கலாம். இதில், ஓய்வூதியதாரர் தனது பெயர், மொபைல் எண், ஆதார் எண் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்களைப் பூர்த்தி செய்து வீட்டிலேயே டிஜிட்டல் முறையில் செய்து முடிக்க முடியும்.
மறுபுறம், அவர்கள் தனிப்பட்ட முறையில் ஓய்வூதிய விநியோக வங்கிகளுக்குச் சென்று ஒரு படிவத்தை சமர்ப்பிக்கலாம். மூன்றாவதாக, பிரமாணச் சான்றிதழைச் சமர்ப்பிக் வீட்டிற்கு வந்து செய்யக்கூடிய வசதியும் அவர்களுக்கு உள்ளது.
மேலும் படிக்க:
அனைவருக்கும் பென்சன்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் சலுகைகள்!
Share your comments