தபால் துறையில் காலியாக உள்ள 38,926 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. ஆனால் விண்ணப்பதாரர்கள் தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை.
இந்திய தபால் துறை கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கிராம தபால் சேவை
மொத்த காலியிடங்கள் – 38,926
தமிழ்நாட்டில் காலியிடங்கள் – 4,310
கல்வித் தகுதி (Educational Qualification)
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி (Age Limit)
18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் (Salary)
கிராம தபால் ஊழியர் (BPM) – ரூ.12,000
உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) – ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை (Selection)
இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
05.06.2022
விண்ணப்பக் கட்டணம் (Fees)
பொது பிரிவுக்கு ரூ. 100
SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
மேலும் படிக்க...
Share your comments