1. மற்றவை

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம்?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Old pension scheme in Tamil Nadu!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருப்பினும்,கோரிக்கையை ஏற்று அரசு முடிவு எடுப்பதில், தாமதம் நீடிக்கிறது.

தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்காகவே CPS ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து போராடுகின்றனர்.

ஆலோசனை

CPS இயக்கம் சார்பாக காணொலி வாயிலாக ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சு.ஜெயராஜ ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எந்தெந்த இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

27.08.2022 

திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம்

28.08.2022 

மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை.

27.08.2022 

புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை.

28.08.2022

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சென்னை.

இதுமட்டுமல்லாமல் செப்டம்பர் 9ஆம் தேதியன்று மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் நடைபெறும் இடங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று CPS ஒழிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும்வரை தொடர்ந்து போராடுவோம் என்று அரசு ஊழியர்கள் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கும் நிலையில் தற்போது இல்லை எனத் தெரிகிறது.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: Old pension scheme in Tamil Nadu!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.